பக்கம்:செம்மாதுளை .pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ւ* துண்டுகள்தானே கிடைக்கும். அதனல் பிரயோ ஜனம் ?”

"உன் கதையை நான் தெரிந்து கொள்வதிலே உனக் கென்ன மனக் கஷ்டம் ? என்னை நீ அன்னியன் என்று நினைக்கிருய்!”

'இல்ல இல்லை! போன கதை போகட்டும், புதிய கதை தயாரிப்போம் என்கிறேன்! அதற்குள் கோபமா ?”

புதிய கதை! புலியடித்துப் பொழுதுபோக்கும் இந்தப் பொல்லாத கள்ளன். கிளியொத்த சுந்தரியோடு எப்படித் தான் எழுத முடியும் புதிய கதையை'

புதிய கதை எழுதப் புலியடிக்கும் புகழ் வீரரைத் தான் நான் எதிர்பார்த்திருந்தேன், மையிருட்டு வந்த வுடன் மாடத்துப் பாலேக் கு டி த் து வி ட் டு ஒடும் பூனை மனிதர்களால்தானே என் வாழ்வு சூன்யமாகி விட்டது!"

"இன்னும் சுற்றி வளைத்துக்கொண்டே இருக் கிருயே சுந்தரி!-தேவன் சற்றுக் கொஞ்சலாகவே கேட் டான்.

சுந்தரி மெதுவாக எழுந்தாள். நீலப் புடவையைச் சரிசெய்து கொண்டாள். மெல்ல நடந்தாள். அந்த அன்ன நடை, தேவனுக்கு அன்பழைப்பு விட்டது. பின் தொடர்ந்தான். கொல்லைப்புறத்தில் கொடி முல்லைப் பந் தலுக்கடியிலிருந்த சலவைக்கல் மேடையில் அமரும்படி தேவனுக்கு ஜாடை காட்டினள்.

தேவன் உட்கார்ந்தான். சிலம்பி, வெள்ளித்தட்டில் துளிர் வெற்றிலையையும், சீவிய கொட்டைப் பாக்குச் சீவலை யும் கொண்டுவந்து வைத்தாள். அவளுடைய நிழல் மறைந் தது. சுந்தரி தேவன் பக்கத்தில் அமர்ந்தாள். உலர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/49&oldid=565963" இலிருந்து மீள்விக்கப்பட்டது