பக்கம்:செம்மாதுளை .pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

போன உதடுகளுக்கு, இரண்டு துளிர் வெற்றிலைகளைப் போட்டு இளங்காவி பூசிக்கொண்டாள்.

- சுந்தரி:

1.இ...ம்! சுந்தரியின் தொனியில் புதுப் பெண்ணின் தனித்தன்மை பிரதிபலித்தது. எப்படித்தான் சுந்தரிக்கு அது ஏற்பட்டது என்று தேவனுக்குப் புரியவில்லை. புதிய விணையின் இனிய சாயலில் மெய்மறக்கும் கலாரசிகனப் போல் சொக்கிப் போனன் தேவன். பொழுது புலர்ந்த தும் காம்பை அறுத்துக் கொள்ளப் போகும் நாளைய மலர் கள், பாதி மலர்ந்து புது மணத்தைச் சுடச்சுட”த் தெளித். துக் கொண்டிருந்தன. மோகன ராஜ்ஜியத்தின் மாணிக் கச் சிங்காதனத்தில் அமர்ந்திருந்த சுந்தரி, கூந்தலை அள்ளிச் சேர்த்து முன் பக்கமாகப் போட்டுக் கொண்டாள். தேவன் அவள் உதட்டின் அசைவையே ஒவ்வொரு கணமும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதோ .ெ த ரி கி ற ேத வீடு, அதுதான் எங்க ளுக்குப் பூர்வீகமான வீடு' என்று சொல்லி, தேவனின் கையாலேயே அந்த வீட்டுக்குக் குறி வைத்துக் காண் பித்தாள்.

"குட்டிச் சுவர்போல் தெரிகிறதே!'

"ஆமாம், குட்டிச் சுவர்தான். அந்தக் குட்டிச் சுவரின் ஒவ்வொரு செங்கல்லும் ஒராயிரம் கதைகள் சொல்லும். அத்தான், இந்தக் குட்டிச் சுவர், பல வீடுகளைக் குட்டிச் சுவராக்கிவிட்டுக் கடைசியாகத்தான் குட்டிச்சுவராகியிருக் கிறது: * :

"என்ன சுந்தரி, கதைக்குள் கதையா? உன் கதை என்னவென்ருல் உன் பாட்டி கதையை ஆரம்பித்து: விட்டாயே!” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/50&oldid=565964" இலிருந்து மீள்விக்கப்பட்டது