பக்கம்:செம்மாதுளை .pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

'பாட்டி கதையல்ல தலைவரே, என் அன்னையின் சரித்திரம்!”

"தாயாரையா இப்படிப் பேசுகிருய் ?”

எப்படிப் பேசுகிறேன்! தொழில் நன்ருக நடந்தது. எழில் மாடத்தில் வாழ்ந்தார்கள் என்கிறேன். குறை யொன்றும் சொல்லவில்லையே!”

-இ.ம் சொல்லு:

"பர்வதம் என்ருல் பத்துப் பதினைந்து வருஷங்களுக்கு முன் எங்கும் அடிபட்ட பெயர். என் தாயாருக்கு நான் . மூத்தவள். எனக்கு இளையவள் ஒருத்தி. அவள் பெயர் வடிவாம்பாள். அன்னை பர்வதத்தம்மாள் கண்களை மூடிய போது இலட்ச ரூபாய் அளவில் எங்களுக்குப் பொதுச் சொத்து இருந்தது. வடிவு வயது பெரு திருந்ததால் குடும் பத்தின் மேற்பார்வையை நானே ஏற்றுக்கொள்ள வேண் டியவளாக இருந்தேன். ஒரே சமையல், ஒற்றுமையாகத் தானிருந்தோம். ஒரே கண்ணுடியில் முகம் பார்த்துக் கொள்வதையும், ஒரே சாந்துக் கிண்ணத்துப் பொட் -டையே இருவரும் நெற்றிக்கு வைத்துக்கொள்வதையும் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்கள் எங்கள் உற வினர்கள். -

புலமை பெற்ற ஒக்கூரை உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். அந்த ஊரில் பிறந்தவர்தான் அவர் என் வாழ்க்கைக்குத் தொடக்க விழா நடத்தியவரைத்தான் சொல்லுகிறேன். பெயர்...முருகப்பர்: நா ன் சின்ன வளாக இருந்தபோது என் கன்னத்தைக் கிள்ளி மகிழ்ந் தார். பருவமடைந்த பிறகு புருஷனுகவேவந்துவிட்டார். தாசிக்கு ஏது புருஷன் என்பீர்கள். என் விஷயத்தில் அந் தப் பொதுவான பழமொழி பொய்த்துவிட்டது. பதினறு வயதிலிருந்து இருபத்திரெண்டு வயதுவரை அவர் என் பக்கத்திலேயே இருந்தார் என்பாலுள்ள அன்பு குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/51&oldid=565965" இலிருந்து மீள்விக்கப்பட்டது