பக்கம்:செம்மாதுளை .pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

யுமே, ஆசை அழியுமே என்பதற்காக அவர் சுயஜாதியில் திருமணம் செய்து கொள்ளாதிருந்தார். நாட்டுக் கோட் டைச் செட்டியார் வகுப்பில் இதை ஒரு தியாகம் என்றே பலரும் கருதினர்கள்.

இளம் பெண்ணையும், பெண்ளுேடு வரும் பெரும் பொருளையும் இழப்பது, துறப்பது தியாகம்தானே! புத் தருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டால், அவர் புரட் சிப் போக்கை நிறுத்திக்கொண்டு, புவியாளும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்றுதானே அவர் தகப்பனர் சுத்தோ தனர் எண்ணினர். அந்தக் கதிதான் முருகப்பனுக்கும்! பெரிய இடத்தில் கலியாணம் செய்து வைத்துவிட்டால் முருகப்பர் திருக்கோஷ்டியூருக்குப் போகமாட்டார் என்று அவர் தந்தை திட்டமிட்டார். புத்தர் திருமணத்தை நடத்திய பிறகும் புரட்சியை வளர்த்தார். முருகப்பர் திருமணத்திற்கே ஒப்புக்கொள்ளவில்லை. என் வாழ்வு சுந்தரியிடம்தான் என்று சொல்லிவிட்டார். அப்போது தங்கை வடிவாம்பாள் பருவமடைந்த புதிது. தாசி வீட் டில் பிறந்துவிட்டாலும், என்னுடைய கண்டிப்பான கண் காணிப்பில் இருந்ததால் வடிவாம்பாள் ஆடவர் முகத் தைத் தொழில் கண்னேட்டத்தோடு பார்ப்பதற்குப் பழக வில்லை. பண்ணையார் வீட்டுப் பெண்ணைப்போல், அதோ இருக்கிறதே அந்தக் கீற்றுச் சவுக்கைக்குள்ளேயே இருந் தாள். மேலத் தெரு மின்மினி, மூலை மாடி சத்தியபாமா... இவர்களுக்கெல்லாம்கூட வடிவாம்பாளின் அந்தப்புரம் பிடிக்கவே இல்லை என்ன செய்வது! அன்னையின் காலத் தோடு குலத்தொழில் அழிந்து போகட்டும் என்று எண்ணிய, தால் மற்றவர்கள் விரோதத்தை மட்டுமல்ல, உற்றவர்கள் எதிர்ப்பையும் சேகரித்துக் கொண்டேன். !ኑ

திருக்கோஷ்டியூர், குன்றக்குடி, விருவிமலை போன்ற ஊர்களில், தாசி வீட்டில் ஒரு பெண் பருவமடைந்திருக் கிருள் என்ருல், நாடகத்தில் சிறப்பாக நடித்தவரைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/52&oldid=565966" இலிருந்து மீள்விக்கப்பட்டது