பக்கம்:செம்மாதுளை .pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

நாடகம் பார்த்துவிட்டுப் போகிறவர்கள் தெருவெல் லாம் பேசிக்கொண்டு போவதைப் போலவே அந்தப் புதுப் பெண்ணைப்பற்றிப் பணக்கார வாலிபர்கள் பேசிக் கொள்வதுண்டு. அந்த வீட்டில் ஒரு புதிய சீமான் வரும்வரை பேச்சு ஓயாது. ஒழியாது; அது பிரச்சினை யாகிவிடும். வடிவாம்பாள், வாலிபர்கள் மத்தியில் பிரச் சினையாகத்தான் மாறிவிட்டாள். என்னுடைய அடக்க மும், மெளனமும் சேர்ந்து தேடி வைத்திருந்த மரியாதை, என் வீட்டுக் கதவை மற்றவர்கள் தட்டவிடாமல் பாது காத்தது. -

கொடைக்கானல் மலேச்சரிவில் முருகப்பருக்கு ஒரு பழத்தோட்டமிருந்தது? நானும் அவரும் அதைப்பார்த்து வருவதற்காக ஒருமுறை போயிருந்தோம். வடிவாம்பாளை யும் உடன் அழைத்தேன். அத்தான் இருக்கிருர்; எனக்கு வெட்கமாயிருக்கிறது" என்ருள். அந்தப் பதில் ஒருவகை யில் மகிழ்ச்சியைத் தான் தந்தது. தாசி வீட்டு யுவதி வெட்கத்தைப் பற்றிப் பேசுவதென்ருல் எளிதில் எதிர் பார்க்கக் கூடியதா ? வடிவாம்பாள் பேசிள்ை அப்படி. சிலம்பியை அவளுக்குத் துணையாக வைத்துவிட்டு நாங்கள் மலைக்குப் போளுேம். எந்தச் சிலம்பியை ? இப்போது இருக்கிருளே இந்தச் சிலம்பியைத்தான். நாங்கள் திரும்பி வருவதற்கு ஒருவாரம் பிடித்தது. ஆனால், போனபோது இருந்த சுகம் வரும்போது இல்லை. அந்தக் குளிர் நிலத்துச் சீதோஷ்ணம் என் உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை: லேசான காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பிளுேம். காய்ச்சல் எனக்கு மட்டுந்தான். அவருக்கு அல்ல.

ஊர் திரும்பி இரண்டு நாளாயிற்று. என் உடல் நலிவு கண்டு வடிவு, கலங்கினுள். ஆறுதல் சொன்னேன். செத்துவிடமாட்டேன், சஞ்சலப்படாதே என்றேன். ஆனல், நாளுக்கு நாள் உடல்நிலை எனக்கு அச்சத்தை வளர்த்துக் கொண்டிருந்தது. எலும்பும் தோலுமாய்ப் போய்விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/53&oldid=565967" இலிருந்து மீள்விக்கப்பட்டது