பக்கம்:செம்மாதுளை .pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

டேன் மீண்டும் பிழைத்து எழுவேன் என்ற நம்பிக்கை போய்விட்டது.

சோகத்தால் முருகப்பரின் முகம் வீங்கிவிட்டது. பொறுமினர். கண்களைத் துடைப்பதும், மூக்கைத் துடைப் பதுமாகவே இருந்தார்.

ஒருநாள் அவர் என் அருகில் வந்து உட்கார்ந்தார்: அவரோடு பேசக்கூட எனக்கு சக்தி இல்லை. திக்கித் திண றிச் சில வார்த்தைகள் பேசினேன்.

"அத்தான், தாசி வயிற்றில் பிறந்த என்னைத் தாரமாக ஏற்றுக்கொண்டீர்கள். மனதார வ ர.வே ற் கிறேன். உங்கள் மனங்கோளுமல் இறுகாறும் நடந்து கொண்டேன்: இனி எனக்கு நம்பிக்கை இல்லை அத் தான். உங்கள் மனைவி ஒரு கைமாறு செய்யப் போகி ருள். எத்தகைய சபலத்தாலும் உடைத்துவிட முடியாத வகையில் உறுதிப்படுத்திக்கொண்டுதான் இன்று உங்க ளிடம் வெளியிடத் துணிந்தேன். இந்தச் சுந்தரி, மூருகப் பரின் மனைவியாகவே இது வரை வாழ்ந்தாள். அவளு டைய ஆசை, முருகப்பர் சாகும்வரை காலஞ்சென்ற பர்வதத்தம்மாளின், ம்ருமகளுகவே இருக்கவேண்டுமென் பது தான். அதற்காகவாவது என் முடிவை மறுக்காதீர் கள் அத்தான். புத்தம் புதிய மலர், பூரிப்பால் ஒளியிடும் வண்ணச்சிலை மேனி-வடிவைத்தான் சொல்லுகிறேன். அத்தான். அவளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டு . உங் களுடைய பொற்பாதங்களை என்னுடைய கண்ணிரால் நனைத்துக் கேட்டுக் கொள்கிறேன்; இன்று முதல் அவள் உங்கள் மனைவியாக இருக்கட்டும். என் ஜீவன் மறையுமுன் தங்கை வடிவு, வாழ்க்கை நடத்துவதை நான் பார்த் து விடவேண்டும்” என்று முருகப்பரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். முருகப்பர் வாய்விட்டு அழு தார்.

நீ சாகமாட்டாய் சுந்தரி. கலங்காதே கெடு மனங் கொண்டோருக்குத் துன்பம் வரும்போதுதான் அது

2016–4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/54&oldid=565968" இலிருந்து மீள்விக்கப்பட்டது