பக்கம்:செம்மாதுளை .pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வலிமை பெறுகிறது. உன்னைச் சுடும் துன்பத்திற்கு வலி வேது சுந்தரி?’ என்று எனக்குச் சமாதானம் சொன்னர் முருகப்பர்.

என் மனம் சாந்தி பெறவில்லை. வடிவாம்பாளை

அழைத்தேன். அருகில் வந்தாள். அன்றுதான் அவள் முதல் முறையாக முருகப்பருக்கு எதிரே நின்ருள். "அத்தானைப் பார் வடிவு!’ என்றேன். அவள் தலை யைத் தொங்கப் போட்டாள். வெட்கப்படாதே வடிவு. இனி எதுக்கு வெட்கம்? இருந்தது போதும்' என்று சொன்னேன். அவள் குனிந்த தலை நிமிரவில்லை, தேள் கொட்டிய் குடத்திலிருந்து தண்ணிர் கசிவதுபோல் வடி வாம்பாளின் கண்களிலிருந்து கண்ணிர் கசிந்தது. மெத்தக் கடினப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு வடிவாம்பாளின் கைகளைப் பிடித்து முருகப்பரின் கையில் கொடுத்தேன். மூன்று பேரின் கண்ணிரும் அன்று சங்கம மாகியது.

வடிவு வாழ்வைத் தொடங்கிளுள். என் வாழ்வைத் தொடங்கி வைத்த அதே முருகப்பர், என் தங்கையின் வாழ்வையும் தொடங்கி வைத்தார். எங்கள் குடும்ப ஒற்று மையைக் கண்டு திருக்கோஷ்டியூரே பெருமிதம் கொண் ه / نيسا

ஒரு மாதம் கழிந்தது.

இரவு நேரங்களில் நான் இருமிக்கொண்டே இருப் பேன். முருகப்பரும் வடிவாம்பாளும் என் பக்கத்திலேயே இருந்துவிட்டு, நான் தூங்கிய பிறகு படுக்கையறைக்குப் போவார்கள். சில நாட்களில் எனக்குத் துரக்கமே வருவ தில்லை. இவர்கள் காத்திருக்கிருர்களே என்பதற்காகத் துரங்குவதுபோல பாவனை செய்வேன். நான் துரங்கி விட்ட தாக எண்ணி இவர்கள் படுக்கையறைக்குப் போவார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/55&oldid=565969" இலிருந்து மீள்விக்கப்பட்டது