பக்கம்:செம்மாதுளை .pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

எனக்காக இரண்டு இள இதயங்கள் ஏன் வதங்க வேண்டும்? - இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. நான் சாகவு மில்லை; பிழைக்கவுமில்லை:

ஒகு நாள் முருகப்பர் என்னிடம் வந்து பிரசித்தி பெற்ற நாட்டு வைத்தியர் ஒருவர் வந்திருக்கிருர். சிவ கங்கை ராணி வேலு நாச்சியாரிடம் நற்சாட்சிப் பத்திரம் பெற்றவர்; ஜமீன்தார் குடும்பங்களுக்குச் சேவை செய் கிறவர். அவரை வரவழைத்திருக்கிறேன். குணமாகி எளிடும்' என்ருர். எந்த வைத்தியமும் இனி பலிக்காது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருந்தது. ஆகவே யார் வந்தாலும் முடிவு:ஒன்று தான் என்ற எண்ணத்தில் எல்லாவற்றிற்கும் மெளனம் சாதித்தேன். வந்த வைத்தியர் தொண்ணுாறு நாட்களுக்கு மருந்து சாப்பிட வேண்டுமென் முர். நான் மறுத்தாலும் முருகப்பர் விட்டால்தானே! ஒவ்வொரு நாளும் வைத்தியரோடு வருவதும் போவது மாக இருந்தார் முருகப்பர் ஒரு நாள் அவரிடம்; எங்கே வடிவு என்று கேட்டேன். அவளுக்குத் தலைவலி என்ருர் முருகப்ப்ர், அதிலிருந்து ஒரு வாரம் வடிவு வரவே இல்ல்ே: எட்டாவது நாளன்று வழக்கம்போல் முருகப்பர் வைத்திய ரோடு வந்தார். வடிவு வரவில்லையே என்று கேட்டேன், நாளைக்கு அழைத்து வருகிறேன் என்ருர் ஆளுல் மறுநாள்? முருகப்பர் கூட வரவில்லை: வைத்தியர் மட்டுந்தான் வந் தார். முருகப்பரும், வடிவும் வரவில்லையா என்று வைத்தி பரிடம் கெட்டேன். அவர்கள் ஒக்கூருக்கு நாடகம் பார்க்கப் போவதற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிருர்கள் என்ருர் வைத்தியர்: என்னைக் காட்டிலும் வடிவு பேறு பெற்றவளாகி விட்டாள் என்று நான் பெருமைப்பட்டேன்: இத்தனை வருஷ காலமாக முருகப்பரின் சொந்த ஊருக்குப் போக எனக்குக் கிடைக்காத வாய்ப்பு அவளுக்குக் கிடைத் தது என்பதற்காக என்னல் மகிழாமல் இருக்க வில்லை; . . . . ; ; ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/56&oldid=565970" இலிருந்து மீள்விக்கப்பட்டது