பக்கம்:செம்மாதுளை .pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

நாடகம் பார்க்கப்போன அவர்கள் மறு நாள் பகல்

திரும்பிவிட்டதாகச் சிலம்பி சொல்லத்தான் எனக்குத்

தெரியும். வந்தவர்கள் என்னை வந்து பார்க்கவில்லை. வைத்தியர் தான் வந்து போளுர்,

புதிய வைத்தியரிடம் சிகிச்சை பெறத் தொடங்கி ஐம்பது நாட்களுக்குப் பிறகு, உடம்பில் அங்கங்கே தேங்கி நின்ற அசுத்த ரத்தம் ஊர்வது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. வரண்டு கிடந்த தொண்டையில் ஈரம் தங்கியது. யார் வந்து என்னைப் பார்க்காவிட்டா லும் பரவாயில்லை, தேவைப்படும்போது சிலம்பியைக் கூப்பிடவாவது தொண்டை வந்ததே என்ற திருப்திதான் எனக்கு.

என் பேச்சுக் குரல் அவர்களுக்கு நாராசமாகப் பட்டி ருக்கும் போலிருக்கிறது. ஏனென்ருல். அவர்கள் முகப்பி லேயே இருந்தார்கள் முகத்தைக்கூட அவர்கள் காட்ட விரும்பவில்லை.

ஒரு நாள் இரவு எல்லோரும் படுத்தபிறகு சிலம்பி யைக் கூப்பிட்டு விஷயங்களை விசாரித்தேன். முருகப்பர் மீதும், வடிவாம்பாள் மீதும் எனக்குக் கோபம் பறக்கும் படியான சில சம்பவங்களைச் சொன்னுள் அவளுக்கென்ன தெரியும் பாவம் உலகத்தில், கற்ருேரில் நல்லவர்க்ள் ஒரு சிலருக்கு மட்டுமே யிருக்கும் களங்கமில்லாத உள்ளம், கல்லாத பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. சிலம்பி அதற்கு உதாரணம். அவளுக்கு என்மீதுள்ள பாசத்தால் உள்ளதை உள்ளபடி சொன்னாள். அப்போது வைத்தியர் வந்து விட்டார். சிலம்பி பேச்சை நிறுத்திக் கொண்டாள்; ஆனல் வைத்தியர் பேச்சை ஆரம்பித்ததும், சிலம்பி விட்ட இடத்திலிருந்து தொடங்குவது போலிருந்தது. சுந்தரி வடிவாம்பாளுக்கும் முருகப்பருக்கும் தனிக்குடித்தனம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கும் போலிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/57&oldid=565971" இலிருந்து மீள்விக்கப்பட்டது