பக்கம்:செம்மாதுளை .pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

கிறது' என்று தொடர்ந்தார். எனக்குச் சுளிர் என்று பட்டது: என் கண்களுக்கு மட்டுமல்லாமல் என் காது களுக்கும் ஸ்பரிச உணர்ச்சிகளுக்கும் விருந்தாளியாக இருந்த முருகப்பர் பிரிந்துபோக விரும்புகிருர் என்ற சேதி என்னுடைய அங்கத்தை யெல்லாம் தீயில்போட்டு வாட்டி வேகவைத்தது: வைத்தியரே. அவர்கள் ஏன் போகவேண்டும்? ஊருக்குள்ளே எங்களுக்கு இன்ளுெரு வீடு இருக்கிறது. நானே அந்த வீட்டுக்குப்போய் விடு கிறேன். அவர்கள் தாராளமாக இந்தப் பங்களாவில் குடியிருக்கட்டும' என்று சொன்னேன்.

வைத்தியர் மறுநாள் வரும்போது அவர்கள் அந்த வீட்டுக்குப் போகிரு.ர்களாம்" என்ருர். "அதிலும் எனக்குத் தகராறு இல்லை. தாராளமாகப் போயிருக் கட்டும். ஆனால், வடிவாம்பாளுக்கு மட்டும் ஒன்று சொல் லுங்கள்: முருகப்பரை அவள் வசப்படுத்திக் கொண்டு விட்டதாக எண்ணுவாள். அது தவறு நான்தான் முருகப்பரை அவளுக்குக் கொடுத்தேன் என்பதை மட்டும் அவளுக்குச் சொல்லிவிடுங்கள் என்றேன்.

நல்ல நாள் பார்த்து வடிவாம்பாளும் முருகப்பரும் நாகபாசத்தார் தெருவிலுள்ள பழைய வீட்டிற்குக் குடி போய் விட்டார்கள்: நாகபாசத்தார் தெரு என்பது ஒரு தெருவின் பெயரா என்பீர்கள்: ஆம், தெருவின் பெயர் தான். தேவதாசிகள் இருக்கும் பகுதிக்கு அந்தப் பெயரைத் தான் ஜமீன்தார்கள் வைத்திருக்கிருர்கள். தேவஸ்தான வரவு செலவுக் கணக்கில்கூட இந்தப் பெயர்தான் குறிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பெயரை மாற்ற யாரும் இன்னும் தயாராகவில்லை.

சுந்தரி கதையை முடிக்கவில்லை. அப்போது சிலம்பி வந்தாள். அவள் எதற்காக வருகிருள் என்பதை அறிந்து கொண்ட சுந்தரி, சாப்பிடத்தானே! இலையைப் போடு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/58&oldid=565972" இலிருந்து மீள்விக்கப்பட்டது