பக்கம்:செம்மாதுளை .pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இல்லை, இல்லை வெள்ளித் தட்டைக் கழுவி வை! தடுக்கை எடுத்து விரி! போ!' என்று சொல்லியனுப்பினுள் சுந்தரி யின் சோகக் கதையை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த வாளுக்குவேலி இடையிடையே பெருமூச்சு விட்டுக்கொண் டிருந்தான். நெடுநேரம் அவன் பேசாதிருந்ததால் அவன் தொண்டை அடைத்திருந்தது. இரண்டு முறை செருமிக் கொண்டு கதையைத் தொடர்ந்து கேட்கத் தயாரானன். சுந்தரி தொடர்ந்தாள் : х

"அதோ மங்கலாக ஒரு கூந்தப்பனை மட்டும் தெரி கிறதே, அது, வடிவாம்பாள் வீட்டுக் கொல்லையில் இருக்கிற மரம்தான். என் அன்னை சிறுமியாக இருந்தபோது அந்த மரமும் நன்முக இருந்ததாம். மரங்களைப்போல் மனிதர் களுக்கும் முதுமை தட்டாதிருக்குமானல் உலகத்தில் என்னென்ன அனர்த்தங்கள் விளையுமோ?

ஒற்றுமையாக வாழலாம். உலகத்திற்கு அது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்றுதான் எண்ணினேன் அந்த ஆசை செத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன என் னிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தாரோ அவ்வளவு அன்பை அவள்மீதும் வைத்திருந்தார். வீட்டில் புழங்கு வதற்கு வெள்ளியிலேயே பாத்திரங்கள் செய்து கொடுத் தார். அவள் பெயரால் கோயிலிலே உள்ள அம்மனுக்கு வைரத்தோடு வாங்கிக் கொடுத்தார். அவளுடைய வீம் புக்காக, எனக்கு என்னென்ன சாமான்கள் வாங்கிக் கொடுத்தாரோ அத்தனையும் அவளுக்கும் வாங்கிக் கொடுத்தார். தாசி விரும்பும் பொருளையும் சொரிந்தார். ஒரு குடும்பப் பெண் எதிர்பார்க்கும் அன்பையும் வழங்கி ஞர். ஆலுைம் வஞ்சிக்கப்பட்டாரே! அந்தக் கதையை நினைக்கும்போதுதான் இந்த உலகத்தை ஏன் கடல் கொண்டுபோய் விடக்கூடாது என்று தோன்றுகிறது.

முருகப்பர், அவர் தந்தைக்கு ஒரே மகன். நாட்டுக் கோட்டைச் செட்டியார் குடும்பங்களில் ஒரே குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/59&oldid=565973" இலிருந்து மீள்விக்கப்பட்டது