பக்கம்:செம்மாதுளை .pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

என்ருல் அந்தக் குழந்தை மீதுதான் பெற்ருேர்கள் உயிரையே வைத்திருப்பார்களே! அவர் தந்தை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார், முருகப்பரைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. முருகப்பர் அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. அவருடைய தகப்பனருக்கு ஒரு யோசனை தென் பட்டது. முருகப்பருக்குப் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். அப்போதாவது தன் மகன் வீட்டிலேயே விளக் கேற்றி வைக்க ஒரு வணிகர் குலத் திலகவதியைக் கொண்டு வந்து விடமாட்டான என்ற சபலம்தான் அவர் தந்தைக்கு!

முருகப்பருக்குப் பணமுடை தட்டிவிட்டது. செலவு செய்த கரம் செல்வமின்றித் தவித்தது: வலக்கரத்தில் இருந்த வைர் மோதிரத்தை இடக் கரம் கழற்றியது: இடக்கரத்துத் தங்க மோதிரத்தை வலக்கரம் கழற்றியது. மோதிரங்கள் கைமாறின. கழுத்துச் சங்கிலியும் இடுப்புச் சங்கிலியும் வட்டிக் கடையின் வசீகரப் ப்ொருள்களாகி விட்டன.

தகப்பனர் அவர்மீது காட்டிய கோபமும் கசப்பும், முருகப்பருக்கு வடிவாம்பாள்மீது மோகத்தை வளர்த்தது: கிழமை ஒரு தடவை ஒக்கூருக்குப் போவதையும் நிறுத்தி விட்டார். அல்லும் பகலும் வடிவாம்பாள் சன்னதியிலேயே முகாமடித்தார். ஒவ்வொரு முறையும் ஊரிலிருந்து வரும் போதெல்லாம் புதுப் புதுப் பொருள்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து இச்சையைப் பூர்த்திசெய்து கொண்டிருந்த உள்ளம், வெறுங்கையோடு கூடிய நிரந்தர விருந்தாளியான பிறகு அவரை எப்படி விரும்பும்? விரும்பக் கூடாது என்று சொல்ல மாட்டேன். வடிவாம்பாளின் நெஞ்சு அப்படிப் பழகிப்போன நெஞ்சு என்று சொல்கிறேன்.

பொருளைக் கொட்டிப் புத்தியைப் படித்துக் கொண்ட வர்களும், நிறையப் படித்துப் புத்திசாலிகளானவர்களும் எதிரியின் முகரேகையில் ஒரு கோடு மாறியிருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/60&oldid=565974" இலிருந்து மீள்விக்கப்பட்டது