பக்கம்:செம்மாதுளை .pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அவர்களுடைய குறிப்பைத் தெரிந்துகொண்டு விடுகிருர்கள் அதிலும் தாசியின் எண்ணத்தைத் தெரிந்து கொள்ளவா முருகப்பருக்கு நேரம் பிடிக்கப் போகிறது! இன்ன கிழமை யன்று வருகிறேன் என்று வழக்கமாகச் சொல்லிவிட்டுப் போகிறவர். கடைசி முறையாக ஒருநாள். போய் வருகிறேன் வடிவு' என்று சொல்லிவிட்டுப் போளுர்சி இதுவரை இந்த ஊருக்கு வரவேயில்லை. ஒரு வருஷத்திற்கு மேலாயிற்று அவர் இங்கு வந்துபோய்!”. சுந்தரி இந்தக் கட்டத்திற்கு வந்தபோது வாளுக்குவேலித்தேவன் ஒரு குறுக்குக் கேள்வியைப் போட்டான்.

இப்போது முருகப்பர் என்ன ஆனர்?’ வேலித்தேவன் கேட்டான். ... "

"அவர் இப்போது புத்தி சுவாதீனமில்லாதிருப்பதாகக் கேள்வி!' . . .

தேவன் அனுதாபத்தோடு ஒரு பெரு மூச்சை விட்டான். அதோடு, வடிவு கதி என்னுயிற்று?’ என்றும் கேட்டான். - அவள்தானே! இருக்கிருள். தளுக்கும் மினுக்கும் குறைய வில்லை. இப்போது, வேறு யாரோ வந்து போய்க்கொண் டிருக்கிருர்கள். பட்டமங்கலமாம்! கள்ளர் வீட்டைச் சேர்ந்தவராம். அவர் பெயர் வைரமுத்து என்று சிலம்பி சொன்னுள்' என்று சுந்தரி சொன்னாள். அப்போது, சிலம்பி வந்து சாப்பாடு பரிமாறியாச்சு' என்ருள். தேவன் ஒரு கணம் சிலையாகி உயிர் பெற்ருன்: -

'நீங்களும் கள்ளர்தானே! பட்டமங்கலத்து வைரமுத் தரை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!’ என்று கூறினுள் சுந்தரி. -

"தெரியும் பழக்கமில்லை" என்று எப்படியோ சமாளித் துக்கொண்டு பதில் சொல்லி விட்டான் தேவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/61&oldid=565975" இலிருந்து மீள்விக்கப்பட்டது