பக்கம்:செம்மாதுளை .pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

- இருவரும் எழுந்து உள்ளே போனர்கள். தேவனுக் குச் சுந்தரி சாப்பாடு பரிமாறினுள். தேவனின் எண்ண மெல்லாம் சிதறிச் கிடந்ததால் சாப்பாட்டைச் சுவைத் துச் சாப்பிட முடியவில்லை அவனல். மென்று கொண்டே இருந்தான்; -

சுவையில்லையா சாப்பாட்டில்! வைத்த கறி வைத்த படி இருக்கிறதே!-சுந்தரியின் குரலில் நிலாம்பரி ராகம் கலந்திருந்தது.

சில பெரிய மனிதர்கள் எவ்வளவு பெரிய மனத்தாங் கல்களையும் மறைத்துக்கொண்டு விடுகிறர்கள். வேறு சிலர் சின்னக் காரியங்களைக்கூட விரிவாக்கி மனதை அலட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பு ததும்பப் பேசி, ஆசை பொங்க நடந்து கொள்ளும் சுந்தரியிடம் அவனுடைய மனக்கவலையைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. பிரிய மாகப் பேசினன். நெடுநாள் பழக்கப்பட்டவனப்போல நடந்து கொண்டான். - r

இத்தனை காலமும் இல்லாமல் திடீரென்று தன்னை அழைத்துவரச் செய்து விருந்து நடத்துவது ஏன் என்று தான் முதலில் அவனுக்குப் புரியாமலிருந்தது. ஆனல் சுந்தரியின் கதையைக் கேட்டபிறகு ஒருவாறு அவன் தெரிந்துகொண்டான். வெகு நாட்களுக்கு முன்பு அரும்பு விட்ட எண்ணத்தை அடக்கி அடக்கி, ேயா சி த் து யோசித்து, பின் துணிந்து, இந்த முடிவுக்கு வந்திருக்கிருள் சுந்தரி என்பது மட்டும் தேவனுக்குத் தெளிவாக விளங்கி விட்டது. புருஷன் துணையிருந்தபோதும் பவ்யமாக வாழ்ந் தாள்: புருஷன் கைவிட்ட பிறகும் அந்த இடைளிெயில்’ களங்கம் பூசிக்கொள்ளவில்லை. இனி வேருெருவரோடு வாழ்ந்தாலும் ஊர் துாற்ருது என்ற நம்பிக்கை அவளைத் தைரியசாலியாக்கி வைத்திருந்தது. இல்லாவிட்டால் சந் தனப் பொட்டுக்காரர்களும், ஜரிகை வேட்டி ஆசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/62&oldid=565976" இலிருந்து மீள்விக்கப்பட்டது