பக்கம்:செம்மாதுளை .pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

களும் மிராசுதார்கள்-முதலியார்கள் என்ற பட்டத் திற்குள் மறைந்து கொண்டு குட்டிராஜ்யம் நடத்தும் திருக்கோஷ்டியூரில், சுந்தரி சமமான அந்தஸ்தை எப்படிப் பெற்றிருக்கமுடியும் ? ஊரிலே ஒரு காரியமென்ருல் சுந்தரி யின் கையொப்பமும் அல்லவா முக்கியமாகத் தேவைப் பட்டது!

ஊர் நித்திரை கொண்டது. ராஜகோபுரத்து எண் ணெய் விளக்கு அணைந்துவிட்டது. கொஞ்சும் புருவும் பஞ்சவர்ணக்கிளியும் ஒரே கூட்டில் அடைந்ததுபோல் தேவ னும் சுந்தரியும் ஒரே தலையணையில் தலைசாய்த்தார்கள்; மெல்லிய திரை போன்ற கொசுவலை தொங்கவிடப்பட்ட மெத்தையில் அவர்கள் துயில்கொண்டது கண்ணுடிப் பாத் திரத்திற்குள் வைக்கப்பட்டிருக்கும் மாம்பழமும், ஆப் பிளும் போலத் தோன்றிற்று. -

இருட்டிய பிறகு தேவன் வந்தான். இன்ப நிலவில் பேசிக் கொண்டிருந்தான். இரவு முழுவதும் அங்கேயே தங்கின்ை-இது மனித ஜாதியைப் பொறுத்த மட்டில் சாதாரணமான சம்பவங்கள்தான். ஆனல், தேவனைப் பொறுத்தவரையில்-சுந்தரியைப் பொறுத்தவரையில் எளி தில் நடந்துவிடக் கூடியது அல்ல. கண்ணுரக் கண்டேன் என்று சொன்னல்கூட திருக்கோஷ்டியூரில் யாரும் நம்பவே மாட்டார்கள். தேவனை வரவேற்கத்தக்க அந்தஸ்து சுந் தரிக்கு உண்டு. சுந்தரி விரும்பத்தக்க அந்தஸ்து தேவ னுக்கும் உண்டு. ஆனால் தேவன் வருவான ? சுந்தரி ஒப்புக் கொள்வாளா ? அதைத்தான் ஊரார் நினைப்பார்கள்! கொஞ்சநாள் அப்படித்தான் நினைத்தார்கள்! முருகப்பர் இருந்த இடத்தைத் தேவன் முற்றுகையிட்டான். ராஜா இல்லாத கோட்டைபோல் இருந்த சுந்தரியின் உள்ளத்துக் கோட்டைவாசல் தானகத் திறந்துகொண்டது. கொலு விருந்தான் தேவன். - - காலை அரும்பியது:கதிரொளி கோபுரத்துக் கலசத்தைப் பகல் விளக்காக்கியது. கசங்கிய மல்லிகையும், உதிர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/63&oldid=565977" இலிருந்து மீள்விக்கப்பட்டது