பக்கம்:செம்மாதுளை .pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

ரோஜா இதழ்களும் கட்டிலுக்கடியில் பரவிக் கிடந்தன. கொசுவலையின் ஒரு பகுதி துரக்கிவிடப்பட்டிருந்தது: தேவன் படுக்கையில் இல்லை. புரண்டு படுக்கும்போது விழித்துப் பார்த்த சுந்தரிக்குத் துக்கிவாரிப் போட்டது. பாதி ராத்திரியிலேயே போய்விட்டான் என்று நினைப்பதற் கில்லை. தலையணையின் வலப்பக்கத்தில் தேவன் தலை பதிந் திருந்த இடம் அதுவரை மேவாமல் இருந்தது. சோம்பல் நீக்க முகத்தைத் தேய்த்தாள். கன்னத்தில் ஈரம் தட்டுப் பட்டது. தானுகச் சிரித்துக் கொண்டாள். புதிய வாழ்வு தொடங்கிவிட்டதாக அவள் நினைத்தாள்! புளியங்கொம் பைப் பிடித்திருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டாள். ஊரில் அவளுக்கிருந்த மரியாதை ஒருபடி ஏறிவிடும் என்று கணக்கிட்டு வைத்தாள். இரவின் இன்பமும், உள்ளத்தின் பரிபூரண மலர்ச்சியும், அவளுடைய முகத்திற்கு ஒரு புதிய பொலிவைத் தந்திருந்தன. முகப்புக்கு நடந்தாள். அவள் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, குழந்தைகளின் கிலு: கிலுப்பை நாதத்தை எழுப்பியது. கைவளைச் சத்தம் கர் டைக சங்கீதத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது.

தேவன் ஊஞ்சலில் இருந்தான், அவன் மடியில் ஒர் ஒலைச் சுருள் கிடந்தது: எதிரே காவல்காரக் கவுதாரி கை கட்டி நின்ருன். சுந்தரி அருகில் நின்றுகொண்டு சிக்கலா கிக் கிடந்த கூந்தலுக்குள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பூச்செண்டை விடுவிக்கும் திருப்பணியில் முனைந்தாள். பதம் குறையாத அவளது ஊசி விழிகள் அந்த ஒலைக்குக் குறி வைத்தன. - -

அண்ணுவுக்கு, -

தங்கை கல்யாணி தாங்கொளுத் துயரத்தோடு பாகனேரி சேர்ந்தாள். இனியும் பொறுக்க எனக்குத் துளியும் விருப்பமில்லை. -

அன்புத்தம்பி, கருத்த ஆதப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/64&oldid=565978" இலிருந்து மீள்விக்கப்பட்டது