பக்கம்:செம்மாதுளை .pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

சுந்தரி பார்த்தும் பார்க்காதவள் போல், நீராகாரம் கொண்டு வரட்டுமா ?'

'இல்லை சுந்தரி, இப்போது என் வயிறு எதையும் ஏற்காது. வருத்தப்படாதே அ டு த் த வாரம் வரு கிறேன்.

'ஏன், தவறென்ன நடந்தது! சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். கோபிக்காதீர்கள் என்று கவலையோடு பதில் சொன்னுள் சுந்தரி.

"ஐயோ! உன்னையா சொன்னேன். குடும்பத்திலே ஒரு தகராறு. அது களபலியில் தான் போய் நிற்கும் போலிருக்கிறது! தம்பி துடிக்கிருன். நான் சமாதானப் படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனல், என்னையும் நெருப் பாக்கிவிட நினைக்கிரு.ர்கள்."

  • யாரவன், கானகத்துச் சிங்கத்தைக் கண் சிமிட்டி அழைப்பவன் ?”

"அவளு ?......அதுவும் ஒரு புலிதான் சுந்தரி. சிங்கம் வலிமையுள்ள மிருகமானலும் புலி அதற்குப் பயந்த தாகச் சரித்திரம் இல்லையே! வெள்ளிக்கிழமை என்னை எதிர்பார்."

"மறந்துவிட மாட்டீர்களே!'

"நான ? என் மீசை என் கெளரவத்திற்கு அடையாள மென்ருல், என் கண்கள் உன் நினைவுக் குறிகள் சுந்தரி, மற

வன் வாக்கு கல்லின்மேல் உளி வெட்டுக்கள்;'

தேவன் புறப்பட்டான். அவன் வண்டி மறையும்வரை ஜன்னல் திரை ஒரு பக்கம் விலகியே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/65&oldid=565979" இலிருந்து மீள்விக்கப்பட்டது