பக்கம்:செம்மாதுளை .pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

பொன்னி கழுத்தில் தாலி !

வைரமுத்தனின் மாடு நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனது; தினி செல்லவில்லை. அசை போட வும் சக்தியில்லை. அதைப் பார்த்துப் பார்த்துக் கலங்கினன் வைரமுத்தன். வைத்தியர்களே வகையற்றுப் போய், ஏவல், சூன்யம் என்று கதைத்தார்கள், பலவீனப்பட்ட நெஞ்சு எதையும் ஒப்புக்கொண்டு விடுகிறது. மாட்டு வைத்தியர்களைத் தேடி அலைந்த வைரமுத்தன் மந்திரவாதி களைத் தேட ஆரம்பித்தான் அலைச்சல்தான் மிச்சமாயிற்று. நோய்வாய்ப்பட்டு இருபதாவது நாள், காளை இறந்துவிட் டது. ஊரில் ஒரு பெரிய மனிதர் இறந்தால் எவ்வளவு அனுதாபம் பிறக்குமோ அந்த அளவுக்கு அன்று பட்டமங் கலம் சோகமாகக் காட்சி தந்தது. வைரமுத் தன் தேம் பித் தேம்பி அழுதான். உறவினர்களும் நண்பர்களும் அவனேச் சமாதானப்படுத்திய முறையைப் பார்த்தாலே முத்தன் அந்தக் காளைமீது எவ்வளவு பற்று வைத்திருந்தான் என் பது தெரிந்துவிடும். மொத்தத்தில் வைரமுத்தன் இல்லத் தில் குறிப்பிடத் தகுந்த ஒரு ஜீவன் மறைந்துவிட்டதாகவே ஊரார் கருதினர்கள். -

அயர்ந்து, மறந்து, தன் கணவன் தன்பால் அன்பு காட்டும்போது 'அம்மா’ என்று குரல் எழுப்பிக் கொழு. நனின் கோபத்திற்குத் தூபமிட்ட காளை, கண்ணை மூடி விட்டது என்று கல்யாணி அலட்சியமாக இருந்துவிட வில்லை. அவள் இளகிய சுபாவமுடையவள். விஷப் பூச்சி. களைக் கொன்ருல்கூட தனக்குப் புண்ணியம் கிடைக்காது,

புருஷனின் அருள் கிடைக்காது என்று அடிக்கடி எண்ணிக் கொள்பவள். காளை இறந்துவிட்டது என்றதும் அவளுந் தான் துக்கப்பட்டாள். வைரமுத்தன் சொல்லாமலே, தினசரி அந்த மாடு கட்டியிருந்த கொட்டடியில் விளக் கேற்றி வைத்தாள். ஐந்தாண்டுக் காலமாக அந்த வீட் டுக்கே ஒரு அம்சத்தைத் தேடித் தந்து கொண்டிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/66&oldid=565980" இலிருந்து மீள்விக்கப்பட்டது