பக்கம்:செம்மாதுளை .pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

காளை இறந்ததும் இல்லம், பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்த மைதானம் போல் வெறிச் சென்றிருந்தது: அந்தக் காளைதான் கல்யாணியின் வாழ்க்கையை அலங் கோலம் செய்தது என்ருலும், அந்தக் காளேதான் அவளுக் கும் அவனுக்கும் இடையே ஒடிய நெருப்பாருக இருந்தா லும் அவள் காளையின் பிரிவை எண்ணிப் பெரிதும் துக்கித் தாள். புருஷன் வருத்தப்பட்டால் பெண் ஜாதியும் வருத் தப்படவேண்டும் என்ற பழைய சம்பிரதாயத்தின் அடிப் படையில் அவள் கண்ணிர் வடிக்கவில்லை. உணர்ந்து வருந் தினள். பெருந்துயர் கொடுத்தோரையும் பேணிக் காக்கும் தமிழகத்துப் பெண்மை கல்யாணியைக் கண் கலங்க வைத்தது.

வைரமுத்தன் இப்போது அதிகமாக வீட்டுக்கு வருவ தில்லை. காளை இருந்தபோது இல்லத்தில் சிறிது நேரம் தங்குவதுண்டு. அதன் முதுகைத் தடவிக் கொடுப்ப துண்டு. அது இறந்த பிறகு ஊரின் பொதுச் சவுக்கை தான் அவனுக்குப்பொழுது போக்குமிடமாகப் போய் விட்டது; அந்தக் காலத்தில் பட்டமங்கலத்து நாட்டா ருக்கும், திருக்கோஷ்டியூர் கோயிலுக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்தது. அந்த உறவு சிரஞ்சீவி வரம் பெற்றது என்பார்கள். திருக்கோஷ்டியூர் கோயிலிலே தேர், திருவிழா என்ருல் பட்டமங்கலத்தார் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இன்றியமையாதனவாகி வி ட் ட ன: தேரோட்டத்திற்குக் காப்புக் கட்டி விட்டால் அதிலி ருந்து பத்து நாட்களுக்குப் பட்டமங்கலத்து நாட்டார் திருக்கோஷ்டியூருக்குப் போவதும் வருவதுமாகத் தானிருப் பார்கள். அந்த வருஷத்தில் வைரமுத்தனுக்கும் அப்படி ஒருநிலைமை ஏற்பட்டது. அம்பலகாரப் பட்டம் பெற்றவர் களுக்குத் துணைபுரிபப் போன பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர்களில் வைரமுத்தனும் ஒருவனகி விட் டான். தேரோட்டத்திற்கு நாட்டாண்மை செய்யும் நேரங்கள் தவிர, பாக்கி நேரங்களில் அம்பலகாரர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/67&oldid=565981" இலிருந்து மீள்விக்கப்பட்டது