பக்கம்:செம்மாதுளை .pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

அவரவர்களுக்குத் தெரிந்த இடங்களில் பேச்சுக் கச்சேரி நடத்துவது வழக்கம். தாயம் ஆடுவார்கள். தரையைத் தோண்டி மானப்புள்ளி விளையாடுவார்கள். கிழடு தட்டிய பழுத்த :அம்பலகாரர்கள் கேலி முறை கொண்டாடி அன்ருெரு நாள் கொலுவிருந்த ஐம்பது வயது தாசிகள் வீட்டில் கொட்டமடிப்பது முண்டு. வைரமுத்தன் இளை ஞன். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்த புதிய பாலகனைப் போல் விழித்துக் கொண்டிருந்தான். திருக் கோஷ்டியூர் சிறிய ஊர்-சிங்காரிகளின் வாசஸ்தலம்! ஆளுல், உளுத்துப் போன சம்பிரதாயக் கொள்கைகள் அங்கு மலிந்து கிடந்தன: கோயிலும் அதை யொட்டிய தேவதாசிகளும்தான் அந்த ஊருக்கு ஜீவநாடிகள்.

வைரமுத்தன் ஒய்வு நேரத்தில், நாட்டார்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சத்திரத்தில் தங்கினன். கோயிலிலே கொத்து வேலை செய்தோரையும், வெள்ளித் தீவட்டி பிடிக்கும் மிராசு பெற்றிருந்தவர்களையும் துணைக்கு வைத் துக்கொண்டு பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பான். சில நேரங்களில் பிரபல மஞ்சு விரட்டைப் பற்றிப்பேச ஆரம்பித்து விடுவான் கொத்தனர்கள் முகங் கோளுமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அன்று கோயிலிலே எட்டாந் திருநாள்: சிவகங்கை ஜமீன்தார் மண்டகப்படி, வெண்கலத்தில் செய்த வெட்டுங் குதிரை வாகனத்தில் சாமி வெளிவீதியில் பவனி வரும்: அன்றைய திருநாள் தான் சிறப்பானது. விருந்தினர்களெல் லாம் அன்றே திருகோஷ்டியூருக்கு வந்து விடுவார்கள்:

நவரத்தினம்பிள்ளை அந்த ஊரிலேயே ஒரு பிரபலஸ்தர்: வாழ்ந்து கெட்டவர்: ஜமீன்தார்களின் தோளில் தொங் கிச் செவியைக் கடிக்கத் திட்டமிட்டுக் குப்புறக் கவிழ்ந்த வர்: ஆலுைம் பழைய பெருங்காயக் கிண்ணம் போல அவருக்கு ஊரில் கொஞ்சம் செல்வாக்கிருந்தது: ஒழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/68&oldid=565982" இலிருந்து மீள்விக்கப்பட்டது