பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
99
 


மு.வ - என் வயதென்னை யறிதியோ? க.வ - பல திங்களாம்போலும்.

மு.வ -ஆம். ஆம் பல திங்கள் முதிர்ந்து உளேன். நீ கூறிய துண்மையே. யான் நாள் முதிர்ந்த ஒரு வண்டே நிற்க. வருக நாம் இருவரும் பொருது பார்ப்போம்.

க.வ -ஒ ஓ அது கூடாது; கடவுளாணையாக அது ஒரு காலும் கூடாது. யான் கட்டிளமையுடைமையின் பயனாய வலியுடையே னாகலின், நினக்கு ஊறு இழைக்கினும் இழைப்பன். -

மு.வ - எனவே, நம்மிருவருள் வன்மையற்ற எளியன் யானன்றே. அற்றாக, இளமையும் வன்மையு மிக்க நின்னை என் மாட்டு அறிவுரை கேட்கத்துண்டியது யாது கொல்? இஃது ஒர் வியப்பையன்றோ தருகிறது!

க.வ. :-அற்றன்று. மெய்வன்மைக்கும் அறிவின் வன்மைக்கும் தொடர்பொன்று மின்று. யான் நின்மாட்டறிவுரை கேட்பான் துணிந்தது நீ அறிவுடையை என்பதை யான் நன்குணர்ந்தமையே யாகும். யான் அஃதில் லேனாகலின், இதுபோது இழித்தக்க நிலையை யெய்தியுளேன். . . . . . r

மு.வ :- முதுமையும் இளமையும் - வன்மையும் மென்மையும் - - அறிவும் அறியாமையும் - ஆ. ஏனோ ஒத்த பிறவியும், ஒத்த நிலையும் பொருளாகக் கிளர்ச்சிசெய்த வண்டுகட்கு? எனினும், வருந்தற்க. நாம் இவற்றை யோர் ஒழுங்கிற்குக் கொணர்தல் கூடும். நிற்க, இனி நாம் இருவரும் ஒத்து வாழ்தலாமா? என்னை நின்

கருத்து? -

க.வ - என் இன்னுயி ராணையாக, யான் - இன்றே, ஏன்! இன்னே உடன்படுகின்றேன். நாம் வாழ்தற்கு இடம் யாது? .

மு.வ :-அஃதன்று நான் . முதற்கண் வேண்டுவது. நம் இருவர்க்கும் கருத்துக்கள் முரணாங் காலத்து இடைநின்று தகுதி நோக்குவார் யாவராதல் வேண்டும்.