பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128
செம்மொழிப் புதையல்
 


செய்யுள்’ (சிலப்பதிகம்) என்று தொடங்கினமையும் இக்கருத்தே பற்றியென்க. - -

பொருண்மொழி யிடையிடை விரவிய நூல்கள் சிலவே ஆங்கில நாட்டில் உள்ளனவென்றும், அவை எத்துணை மிகுதிப் படுகின்றனவோ அத்துணை ஒழுக்கமும் உயர்வும் மக்கட்குன் டாகுமென்றும், இவற்றில் முற்பட்டு விளங்குவன நம்நாட்டு மொழிகளே யென்றும் ஜான்மார்லி என்பவர் 1887ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் நாள் எடின்பர்க் என்ற நகரத்தில் செய்த சொற்பொழிவில் கூறியிருக்கின்றார். அவர் நாட்டில் ஒரு கிறித்தவ ஆசிரியர் சூதினால் தம்கைப்பொருளிழந்து, கடன் வாய்ப்பட்டு அது தீர்க்கும் ஆற்றலிலராய் அமெரிக்காவிற்கு ஒடிப் போய் மக்கட்கெனச் சிலபொருண்மொழி நிறைந்த நூலொன்றை “@@@gmai golff Lao(\List(jgiriscir” (Lacon or Many things in few words) என்ற பெயரிட்டு 1820-ஆம் ஆண்டில் வெளியிட்டார் என்றும், அந்நூற்கண் உள்ளன பொருளுரையாகாது பொய்யுரை (உள்ளிடில்லாத உரை, வெற்றுரை) யாக இருந்தமை கண்டு தாம் தீயிட்டெரித்துவிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் பொருண்மொழி புணர்த்துக்கூறல் தமக்கு அணியாகக் கொண்டிருத்தல் வேண்டு மாயினும் அவை பெரும்பான்மையும் மக்கட்கு வேண்டும் பொதுவுண்மைகளையேயுண்ர்த்துகின்றன.

“இம்மை யுலகத் திசையொடும் விளங்கி

மறுமை யுலகமு மறுவின் றெய்துப - செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர் (அகம்- 66) என்றும்,

“அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த

கேளிர் கேடுபல ஆன்றலும் நாளும் வருந்தா வுள்ளமோ டிருந்தோர்க் கில்லெனச் செய்வினை புரிந்த நெஞ்சினர்.” (அகம் - 173) என்றும்,