பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*

178 * - செம்மொழிப் புதையல்

செய்தாலும் குணம் கெட்டவரோடு சம்பந்தம் செய்யக்கூடாது.” ‘செத்த பிணத்தையும் சீரிட்டழு, முதலியன சமுதாயத்தில் வழங்குவன.

“பணமில்லாதவன் பிணம் “பணம் பத்தும் செய்யும்,’ முதலியன பொருள் பற்றி வழங்கும் பழமொழி. ‘கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?’ ‘திரைகடலோடியும் திரவியம் தேடு, முதலியன வாணிகத்தில் வழங்கும் முதுமொழி கள். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், ‘உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறுபோட வேண்டியதில்லை,” என்பவை முதலியன தொழில் சார்பாக நிலவும் மூதுரைகள். ‘விதைப் பழுது முதற்பழுது, ‘ ‘பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ், ‘ என்பவை முதலியன உழவுபற்றி வழங்கும் உலகுரை. “அவனே “அவனே என்பதைவிடச் சிவனே சிவனே என்பது மேல்”, ‘இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தபின் சீதைக்கு இராமன் சிற்றப்பன் என்றார் போல, என்பன சமயம்பற்றி வழங்கும் பழமொழி. “தோட்டிமுத்ல் தொண்டை மான் வரை, என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும் ‘டில்லிக்கு ராசாவானாலும் தல்லிக்குப் பிள்ளை, யென்பது விசயநகர வேந்தர் காலத்தும் முகம்மதிய வேந்தர் காலத்தும் நிலவிய அரசியல் பற்றியும் ‘நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமை போகாது, ‘ ‘பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும், ‘ என்பவை முதலியன மேனாட்டவர்காலத்து அரசியல் பற்றியும் உண்டாகி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்தபின் தேர்தலுக்கு நின்று ஒட்டுப் பெறுபவர்களைப் பற்றி ‘ஒட்டுக்குப் போனாயோ ஒடுவாங்கப் போனாயோ!’ என்பது முதலிய பழமொழிகள் உண்டாகியிருக்கின்றன.

இந்தப் பழமொழிகளை நோக்குவோமாயின், பழங்காலக் குறிப்புகளில் பல காணப்படுகின்றன. இடைக்காலப் பாண்டி வேந்தருள் 12, 13-நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்புசெய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு. அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற் பணிசெய்யும் சிவப்பிராமணர்களும் வயிராகிகளும்