பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/243

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
241
 


திருநிலைஇய பெருமன்னெயில் மின்னொளி யெறிப்ப:

வீறு பெற்று விளங்கினான் என்று பாடுகின்றார்.

இனி, கரிகாலனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பைக் கூறுகின்ற கண்ணனார், காவிரி கடலொடு கூடும் கூடலாகிய துறைமுகத்தின்கண், -

வைகல்தோறு மசைவின்றி உல்குசெயக் குறைபடாது வான்முகந்த நீர்மலைப் பொழியும், மலைப்பொழிந்த நீர்கடற் பரப்பவும் மாரிபெய்யும் பருவம்போல . நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி’

வேந்தனுடைய புலிப்பொறி பொறிக்கப்பட்டு

மலைபோலக் குவிந்து கிடக்கும் என்கின்றார். நகர்க்குள்

நுழைவோமாயின், அங்கே, . -

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியுங் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி’

காணுங் கண்ணுக்கு இனிய காட்சி வழங்குகின்றன என்பர்.

அன்றியும், இந் நகர்க்கண், - . வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கல் சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

w புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

காட்சி மலிந்திருக்கிற தென்பர். w

  • g26