பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

செம்மொழிப் புதையல்


கைத்தொழிலும், சிற்பமும் பிறவும் உலகு புகழ் உயர்வு பெற்றன. இந்திய சீனக்கைவேலை யமைப்புக்கலந்த இந்துசாரசன் கைத் திறங்கள் நாட்டில் வளம் பெற்றன. புதிய புதிய சிற்பத் தொழில்கள் அரசர் ஆதரவு பெற்றன. "புகை முகந்தன்ன மாசில் தூவுடை" எனவும், "நோக்கு நுழைகல்லா நுண்மையபூக் கனிந்து, அரவுரியன்ன அறுவை எனவும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் செய்துதவியது போன்ற நுண் வினையுடைகளும், மெல்லிய பட்டாடைகளும் இவர்கள் காலத்தே வளம்பெற்று உலகு புகழும் ஒண்பொருளாய்ச் சிறந்தன. கம்பளிகளும், பின்னல்களும், கின்காப் (Kin Khab) என்பனவும், “நுரைகவர்ந்தன்ன மென்பூங்கம்பல"ங்களும் புகழ்வோர் புலவரையிறந்து விளங்கின.

இந்த இசுலாம் சமயப் பெருமக்களால் நம் நாட்டில் விளைந்த நலங்கள் பலவும் எளிதில் கண்டு கோடற்கென ஒருவாறு திரட்டித் தந்து இக்கட்டுரையினை முடித்துக் கொள்ளுகின்றாம்.

1. சோழ வேந்தர்களின் வீழ்ச்சிக்குப் பின் கெட்டழிந்திருந்த கடற்படையும் பிறநாட்டுக் கூட்டுறவும் பண்டேபோல் மீட்டும் தோற்றம் பெற்றுச் சிறந்தன.

2. விந்தியவரைக்கு வடக்கில் உள்ள நாட்டில், இவர்தம் வினைத்திட்பம், ஆட்சி நெறி, நன்மனப் பண்பு என்பவற்றால் அமைதியும் இன்பமும் நிலவுவவாயின.

3. தாம் வென்று அடிப்படுத்தி நாடெங்கும் ஒரு தன்மையும், ஒருநெறியும் பொருந்திய ஆட்சிமுறை இவர்கள் காலத்தே நாட்டில் நடைபெறுவதாயிற்று.

5. உயர் வகுப்பினருள் சமய வேற்றுமையிருந்ததெனினும், சமூகவொழுக்கம், உடைமுதலியவற்றில் மக்கட்கிடையே ஒற்றுமை யெய்தி யிருந்தது. சமய வேற்றுமையும் காய்ச்சலும் பூசலுமாய் மாறியது பேரரசப் பெருந்தகைகள், காலத்தில் இல்லை,

5. இந்துத்தானியென்றும், ரெக்டா என்றும் கூறப்படும் மொழி பொதுமொழியாயிற்று; அரசியற் பொதுமொழி பாரசிக மொழி.

6. அவ்வந்நாட்டுத் தாய்மொழிகள், அமைதியும் இன்பமும் நிலவியதன் பயனாய் வளம்பெற்றன. வரலாறு கூறும்