பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
52
செம்மொழிப் புதையல்
 


“கன்று முண்ணாது கலத்தினும் படாது

நல்லான் lம்பால் நிலத்துக் காங்கு.” - ஆகுமன்றோ, இஃது ஒர் உயிர்க்கு எய்தாவிடின் அதன் பொலிவு கூர் யாக்கை. நிற்க. இப்பறவை அவ்விசும்பைப் படர்ந்து சென்று செய்யும் தொழில் யாது கொல் நெடுங் காலமளவும் இஃது ஆண்டுப் பறந்து கொட்புறுதலின் உட்கிடையென்னோடி இதனொடு அங்கு உரையாடி நல்லறிவு கொளுத்தவல்லார் யாவரோ? இவ்வனைத்தும், எண்ணுந் தோறும் மயக்கத்தை யன்றோ தருகின்றன. என்ன இறும்பூது பயக்கும் வாழ்வுகாண் இதன் வாழ்வு’ என்பது.

இங்ஙனம், அது, நினைத்தவண்ணம் பண்டேபோற் றன் சினைகளைச் சூழ்வந்து காவல் புரிந்து வந்தது. அதுபோது, பருந்தின் மெல்லிசைமட்டிற் புழுவின் செவிப்புலனாகலும், அது, முன்னைக் களிப்பின்றெனினும், சிறிது தேறி, நோக்கக் குழையும் என்பதற்கஞ்சி, இனிமை தோன்ற ஒருவண்ணம் எதிர்நோக்கி நின்றது. பருந்தும் வந்தது. இரண்டன் நட்பும் நகுதற் பொருட்டன்றாகலானும்.

“இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

நன்பக லமையமும் இரவும் போல வேறுவே றியல வாகி மாறெதிர்ந் துள.”

என்னும் பொருளை இவை நன்குணர்ந்தவை யாகலானும், முன்னர் நிகழ்ச்சியிற் புழுவின் சினத்தை யறவே மறைய ஒன்றோ டொன்று சிறிது அளவளாவிப் பின் வருமாறு மீட்டும் அவை சொல்லாடல் தொடங்கின.

பருந்து:-யான் கூறுவனவற்றை, முன்னரே கூறியுள்ளவாறு, உறுதிநோக்கும், ஒப்பன கொள்ளும் உளமும் கொண்டு கேட்பையேற் கூறுவல்.

புழு :- ஆயின், அவை என்னிடத் திலவென வெண்ணுதி போலும் நன்று நன்று ஆ கேள்வியிலா தெய்தும் எவ்வகைப் பொருளையும் உறுதிநோக்குக் கொண்ட, உளத்திற்கோடலே என்னியல்பென யான் கூறியிருக்கு மது நின் நினைவின்கணில்லை கொல்லோ