பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

செம்மொழிப் புதையல்



சிறுவன் :- இல்லை. அவருக்குத் தெரியும் என்று யான் - நினைக்கவில்லை. தெரியுமாயின், அவர் இவற்றைப் பிடித்தலும் பிடித்துத்துன்புறுத்தலும் செய்யாரன்றே. யான் எவ்வாறு அறிந்தேனெனின், எனக்கு நம் சோலைக்காவலன் கூறினான். நிற்க, நெருநல் அவர் கூறியவற்றை நோக்கினையா? இவ்வுலகில், அரசர், அரசியார் என உயிர்களுட் சிலரிருத்தல் இயற்கைக்கே மாறானதாம்; எல்லாரும் ஒரே அச்சாக இருப்பதே இதற்குப் போதிய சான்றாம்; இயற்கையிற் றோன்றும் ஒவ்வொரு பொருட்கும் பிறப்பினால் ஒருவகை வேறுபாடும் இன்றாம்; எனவே, அரசர் எனவும் அரசியரெனவும் இருப்பவர் நடுநிலைவரம்பைக் கடந்தவரே யாவராம்.

சிறுமி :-ஆனால், இவற்றை உய்த்துணர்ந்து கோடல் இவ்விக்களுக்கு இயலாதென யான் நினைக்கின்றேன்.

சிறுவன் :- நினைப்பதென்ன உண்மையிலே அது அவற்றிற்குக் கிடையாதுதான். சோலைக்காவலன் கூறியவற்றை மட்டில் இத்தொழிலீக்கள் கேட்டிருக்குமாயின், எத்தகைய சினங் கொண்டிருக்கும்! நீயே நினைத்துப்பார்!!

சிறுமி :- அவன் கூறியதென்ன?

சிறுவன் :- அரசியையும் ஆட்பட்டொழுகும் சிற்றிக்களையும் சீர் தூக்குங்கால் பிறப்பினால் அவற்றிற்கிடையில் ஒருவகை வேறுபாடும் இல்லை. பிறப்பும் தோற்றமும் ஒன்றே. எனினும் இவ்வேறுபாட்டைத் தருவன உண்டிவகையும், உறையுளின் தன்மையுமேயாம். இச்சிற்றிக்களை வளர்க்கும் பெடை வண்டுகள், சிலவற்றிற்கு ஒருவகை உணவும், வேறு சிலவற்றிற்கு ஒருவகை உணவும்; சிலவற்றிற்கு ஒரு வகைக்கூடும், வேறு சிலவற்றிற்கு வேறுவகையான கூடும் தருகின்றன. அதனால் சில ஈயரசிகளாகவும், சில தொழிலீக்களாகவும் மாறுகின்றன. இக்கருத்தே நெருநல் நம் அத்தான் மேன்மக்களையும் தொழில் மக்களையும்பற்றிக் கூறியவற்றுள் அமைந்து