பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி உள்ளும் புறமும் 21

மகுடத்தைத் தாங்கும் அதே வேளையில், தமிழ் மொழி மட்டுமே இந்தியப் பன்னாட்டு மொழி (Indian International language) argyub şpril 13, 365&to பாட்டினைப் பெற்றுள்ளதென்பது இங்கு கவனித்தற் குரிய ஒன்றாகும்

ஒரு நாட்டு மொழி மற்றொரு நாட்டின் ஆட்சி மொழியாகவோ அல்லது ஆட்சி மொழிகளில் ஒன்றாகவோ சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், அந்த மொழி பன்னாட்டு மொழி எனும் சிறப்புமிகு தகுதியைப் பெற்றுவிடும் அவ்வகையில், தமிழ்மொழி இலங்கையில் ஆட்சிமொழிகளில் ஒன்றாக சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அதே போன்று சிங்கப்பூரிலும் தமிழ் ஆட்சிமொழிகளில் ஒன்றாக, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சம உரிமை யுடன் நடைமுறையில் இருந்துவருகிறது

உலகெங்கும் தமிழ்

அது மட்டுமல்ல, மலேசியாவில் நாடாளுமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது பிபிசி போன்ற உலகப் புகழ் பெற்ற ஒலிபரப்புகளில் பன்னாட்டு மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட்டுள்ளது பிபிசி போன்றே சீன வானொலியிலும் தமிழ் ஏற்கப்பட் டுள்ளது அது போன்றே உலகப் பேரமைப்பான யுனெஸ்கோ வெளியீடான 'யுனெஸ்கோ கூரியர்' பன்னாட்டு மாத இதழை தமிழிலும் வெளியிட்டதன் மூலம், தமிழ் சர்வதேச மொழிகளில் ஒன்று என்ற தகுதிப்பாட்டினைப் பெற்றுள்ளது தெளிவாகிறது அவற்றையெல்லாம் விட தமிழுக்கு உலக அரங்கில் கிடைத்துள்ள பெரும் சிறப்பு சுமார் 53 நாடுகளில்