பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 89

அளிக்கப்பட்டது அதனாலும் எந்த விளைவும் ஏற்படவில்லை.

நாடாளுமன்றம் முன்பு தமிழறிஞர் பட்டினிப்

போராட்டம்

இந்நிலையில், தலைநகர் தமிழ்ச் சங்கத்தார் மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையால் நூற்றுக்கு மேற்பட்ட தமிழறிஞர்கள் நாடாளுமன்றம் அருகில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடாகியது உண்ணாவிரத நிகழ்ச்சி செம்மையாக நடந்தேற திமுக, பாமக, மதிமுக உறுப்பினர்களும் அமைச்சர்களும் பெருந்துணை புரிந்தனர் உண்ணாவிரதம் வெற்றி பெற்ற போதிலும், கோரிக்கை வெற்றி பெறவில்லை வழக்கமான 'பரிசீலிக்கிறோம்' என்பதைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை

என்றாலும், இந்நிகழ்வின் மூலம் பத்திரிகை தொலைக்காட்சி, வானொலி போன்ற செய்தித் தொடர்பான ஊடகங்கள் மூலம் தமிழ் செம்மொழி ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் விளம்பரமானது, உலகெங்கும் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் புரிந்து கொள்ள ஏதுவானது இதன்மூலம் ஒருவித விழிப்புணர்வு தோன்றியுள்ளது என்றே கூற வேண்டும் இதன்மூலம் அனைத்திந்திய அளவில் அரசியல் ஆதரவு திரளக் கூடியது சூழலும் உருவாகியுள்ளதெனலாம்

அரசியல் கட்சிகளிடையே செம்மொழி தாக்கம்

இதன் விளைவு இன்று தமிழக அளவில் இயங்கும் அரசியல் கட்சிகளும் அனைத்திந்திய