பக்கம்:செம்மொழி உள்ளும் புறமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்மொழி - உள்ளும் புறமும் 97

இலக்கியத் திறனாய்வுத்துறை வல்லுநர்களின் கவனத்தை ஈர்ப்பது இயல்பு அப்போது அவர்கள் உலகின் மற்றைய செம்மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வர் அத்தகைய ஒப்பீட்டாய்வுகளில் தமிழ் செம்மொழி என்ற முறையில் மற்றைய செம்மொழி களின் தன்மைகளிலிருந்து மொழி, இலக்கிய அளவில் எவ்வாறெல்லாம் தனித்து விளங்குகிறது, மற்ற செம்மொழிகளில் காணவியலாத தனித்தன்மை கொண்ட சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதெல்லாம் ஆய்வு முடிவுகளாக வெளிப்படலாம் இதன்மூலம் தமிழ் மொழி, இலக்கியப் பெருமையோடு தமிழ் இனத்தின் பெருமையும் உலகில் ஆதார பூர்வமாக நிலைபெற வாய்ப்பேற்படும்

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வழிகாட்டும் 'செம்மொழி

தமிழ் செம்மொழி எனும் அங்கீகார முத்திரை பெறுவதன் மூலம் தமிழ் பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் ஒருங்கே வாய்க்க அரும் பெரும் மொழி என்பது தெளிவாகும் அன்றைய மொழி, இலக்கிய வளத்தை அறிவதோடு இன்றைய சமுதாயப் போக்குக்கும் தேவைக்குமேற்ப தமிழை வளர்த்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றிய சிந்தனையும் முனைப்படையும்

இதன் விளைவாக இன்றைய இன்றியமையாத் தேவையான அறிவியல் தமிழாக - நான்காம் தமிழாகத் தமிழை வடித்தெடுத்து வளமடையச் செய்யும் இனிய சூழல் உருவாகும் இதற்கான விரிவான வளர்ச்சித் திட்டங்கள் வகுத்துச் செயல்பட வாய்ப்பு உருவாகும் இதன் வாயிலாகத் தமிழின் பரப்பு விரியும் ஆழம்