பக்கம்:செவ்வானம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 செவ்வானம் வறண்டதாகவே தோன்றுகிறது' என்று எண்ணினான் அவன். அவனது மனப்பண்பு அவனுக்கே சிரிப்பு உண்டாக்கியது. அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த குமுதம் கேட்டாள் ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று. 'நீ நர்ஸ் வேலை பார்க்கலாம், குமுதம்! பிரதிபலனை எதிர்பாராமல் இவ்வளவு கஷ்டப்படுகிறாயே! உனக்கு நான் எப்படி நன்றி செலுத்துவது என்று நினைத்தேன்' என்றான். 'நர்ஸ் வேலை பார்த்தாலாவது சம்பளம் கிடைக்குமே என்ற எண்ணிர்களாக்கும்?" - 'ஊம்' என்று இழுத்தான் அவன். அந்தச் சம்பள விகிதத்திலே எனக்கும் பணம் கொடுக்கலாம்; ஆனால் எப்படிக் கொடுக்க முடியும், பணம் இல்லையே என்று நினைத்தீர்களோ? அப்படியெல்லாம் நினைக்கவில்லை." 'பின்னே சிரிப்பானேன்? 'சிரிப்பதற்குகூட இனிமேல் குமுதாதேவியின் அல்லது குமுதம் அம்மையாரின் அனுமதி பெறவேண்டும் போலிருக்கிறது என்று சொல்லிச் சிரித்தான். போங்கள்!' என்றுதான் சொல்ல முடிந்தது அவளால், ஆனால் அவள் முகம் செக்கச் சிவந்தது. 'இந்த உலகத்தைவிட்டேபோய்விடலாம் என்றிருந்த என்னைத் தான் நீபோகவிடாமல் தடுத்துவிட்டாயே! குமுதம் பதில் பேசவில்லை. அன்று அங்கிருந்து போனவள் அவனைப் பார்க்க தினந்தோறும் அடிக்கடி வந்து அவனுக்கு உணவு கொடுத்துவிட்டு உடனேயே போய்விடுவாள். அவன் சோர் வில்லாமலிருந்தால் ஏதாவது பேசுவான். பழக்கம் சகஜ பாவத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/122&oldid=841331" இலிருந்து மீள்விக்கப்பட்டது