பக்கம்:செவ்வானம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 157 அவன் உள்ளத்தில் வேதனை தெறித்தது. குமுதம் ஏன் அழுகிறாய்? என்று பதட்டமாய் கேட்டான் அவன். அழுவதைத் தவிர நான் வேறு என்ன செய்யமுடியும்? அன்றே நான் கிணற்றில் விழுந்து செத்திருக்கக்கூடாதா என்று நினைத்தேன். வீணாக என்னால் எல்லாருக்கும் கஷ்டம்தான். என்னால்தானே நீங்கள் இந்த ஊரைவிட்டுப் போக நேர்ந்திருக்கிறது?’ என்றாள் அவள் வேதனை கலந்த குரலில், 'அதெல்லாமில்லை. என் வாழ்வில் ஆபத்து எப்பொழுதும் எப்படியும் எதிர்படத்தான் செய்யும் என்பது எனக்குத் தெரியும் உன்னைப் பற்றிய கவலைதான் எனக்கு அதிகமிருக்கிறது. நீ எங்கே போகலாம் என்று கிளம்பினாய், குமுதம்? 'ளங்குமில்லை' என்றாள் அவள். 'பின் பிரயாண முஸ்தீபுகளுடன் புறப்பட்டிருக்கிறாயே?" 'இந்த ஊரில் இனி இருக்க முடியாது என்று தோன்றியது. எங்காவது ? என்னை, எனது பிறப்பை, என் பெற்றோர்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் வாழும் இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். கிளம்பினேன். போகும்பொழுது உங்களை ஒருமுறை பார்க்கவேண்டுமென்று...' அவள் முடிக்கவில்லை. கண்களில் அதிகமாக நீர் கட்டியது பொங்கும் வேதனையை அமுக்கிவிடவிரும்புகிறவள்போல் அவள் உதடுகளைக் கடித்தபடி நின்றாள். அவள் முகத்தை கவனித்து நின்ற தாமோதரன்சொன்னான். குமுதம், எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இந்த ஊரைவிட்டே போகவேண்டியதில்லை. திடீரென்று நாம் இரண்டுபேரும் காணாமற்போய்விட்டால், இவ்வூர்க்காரர்கள் நம்மைப் பற்றிக் கேவலமாகவே பேசுவார்கள். நாம் நினைக்கக்கூட நினையாத பழியை நம்மீது சுமத்துவர். சிவசைலம் வெற்றிச் சிரிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/159&oldid=841371" இலிருந்து மீள்விக்கப்பட்டது