பக்கம்:செவ்வானம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 செவ்வானம் சிரிப்பார். அது கூடாது. அவர்களைத் துச்சமாக மதித்து நாம் - சமூக வெள்ளத்திலே எதிராறு நீந்தத் துணிந்தவர்கள் இப்போது மட்டும் தோல்வியடைந்தாக நினைப்பானேன்? குமுதம், உனக்கு ஆட்சேபனையில்லையெனில், நீ மனமாற என்னை விரும்பினால், நான் உன்னை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஊரிலேயே நமது திருமணத்தைச் சிறப்பாக நடத்தலாம். வம்பு பேசியவர்கள் வாயடைத்துப் போகும்படி செய்வதுடன், பிறர் அபிப்பிராயங்களையோ எதிர்ப்புகளையோ கண்டு நாம் அஞ்சிவிடவில்லை என்று நிரூபிக்கலாம். என்ன சொல்கிறாய் குமுதம்? அவன் சொற்களின் ஜீவனாக ஒலித்த உணர்ச்சி, அவள் உள்ளத்தைத் தொட்டது. முகத்திலே பெருமகிழ்வு பிரகாசிக்க, நீர் முத்துக்கள் ஒரத்திலே ஜொலிக்கும் விழிகளில் தனி ஒளி திகழ, ஆசை நிறைந்த பார்வையைப் பரிசளித்தாள் குமுதம் அந்த அழகை எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் விழிகளால் விழுங்கலாம் என்று தோன்றியது அவனுக்கு அவள்தான் எச்சரிக்க வேண்டியிருந்தது. 'உம், பின்னே திரும்பிவிடலாமே. இங்கேயே நின்று கொண்டிருந்தால்? ஆமாம். விடிவதற்குமுன் வீடு சேர்ந்துவிடலாம் என்று வந்த வழியே திரும்பினான் அவன். குமுதமும் அவனுடன் நடந்தாள். 30 அப்பொழுதுதான் விடிந்துகொண்டிருந்தது. கீழ்வானம் செக்கச் சிவந்திருந்தது. உதயசூரியனின் பவனியை முன்னதாகவே அறிவிக்கும் விசாலக்கொடிபோல. தாமோதரனும் குமுதமும் ரயில்நிலையம் நோக்கிச்சாலையிலே நடந்து கொண்டிருந்தார்கள் அப்பொழுதும். ஆனால் இது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/160&oldid=841373" இலிருந்து மீள்விக்கப்பட்டது