பக்கம்:செவ்வானம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 செவ்வானம் மிகக் குறைவு. எதையும் தங்களுக்காக மற்றவர்கள் செய்யட்டுமே என்ற மெத்தனம் மனிதரிடையே அதிகம் காணப்படுகிறது. சிந்திக்கும் விஷயத்திலும் அப்படித்தான். தங்களுக்காக வேறு யாராவது சிந்திக்கட்டுமே என்று விட்டுவிடுகிறார்கள். அப்படிச்சிந்திப்பவர்கள் மக்களின் அறியாமையையும் பண்பாட்டையும் தங்கள் சுயநலத்துக்குச் சரியானபடி பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆகவே சுரண்டல் பொருளாதாரத் துறையில் மட்டுமில்லை. வாழ்வின் பல அம்சங்களிலும் காணப்படுகிறது. சுரண்டல் எந்த வகையில் தலை துக்கினாலும் கண்டிக்கப்படவேண்டியது. பண மூட்டைகள் பணம் பண்ணுவதற்காகப் பெரும்பாலோரைச் சுரண்டுகிறார்களென்றால், புகழ்பண்ண விரும்புகிறவர்களும் பதவிபெறத் துடிப்பவர்களும் தலைமைப் பித்து பிடித்தவர்களும் எண்ணற்றோரின் அறிவை, காலத்தை, செயல்திறனைச் சுரண்டிப் பிழைக்கிறார்கள். மக்களை மடையர்களாய், மண்டூகங்களாய், மண்ணாந்தைகளாய், தலையாட்டிகளாய், கைதட்டிக்கோஷம் கிளப்பும் மந்கைளாக மாற்றி வருகிறார்கள். இதுவும் ஒருவகைச் சுரண்டல் என்றுதான் நான் சொல்கிறேன். எனது வார்த்தைகள் எடுபடாமல் போகலாம். நேர்மையான சிந்தனைகள் என்றுதான் கெளரவிக்கப்படுகின்றன!" வேறொரு இடத்திலே அவன் எழுதியிருந்தான்; நாட்டின் பெரும்பாலான மக்களிடம் பேசிப்பார். அவர்களுக்கு அரசியல் கலை, இலக்கியம் என்பவை எதுவும் தெரியாது. அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்கிற உணர்ச்சியுமில்லை. அவர்கள் உணரமுடிவது பசி, பசி, பசியேதான். அது வயிற்றுப் பசியாகவு மிருக்கலாம். சதைப்பசியாகவுமிருக்கலாம். இவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள். இத்திருப் பணிகளிலேயே காலம் கழிக்கத்தவிக்கிறார்கள். இவை பற்றிய பேச்சு தான் மக்களிடம் அதிகம் ஒலிக்கிறது.' "நான் சொல்கிறேன் - மக்களுக்காக அரசியல் கட்சிகள், கலை விழாக்கள், விருதுகள் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். மக்களின் பெயரைச் சொல்லித் தாம் உயர விரும்புகிற ஒரு சிலருக்காகத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/38&oldid=841401" இலிருந்து மீள்விக்கப்பட்டது