பக்கம்:செவ்வானம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S8 செவ்வானம் காட்சியளிக்க முயல்வதுபோல் திகழும் இரண்டு சிலைகள் பிரதான மேஜையில் முக்கியத்துவம் பெற்று நிற்கும் மகாநிர்வான நிலையடையக் கண்மூடித் தவம்புரியும் புத்தர் சிலை ஒரு பக்கம் இவ்வுலகில் இன்பம் தரத் தயாராகக் கண்சிமிட்டி முழுநிர்வான நிலையிலே காமக்கவர்ச்சியுடன் காத்திருக்கும் அழகியின் அற்புதச் சிலை ஒரு பக்கம். மத்தியில் முகம் பார்க்கும் கண்ணாடி பெரியது. அதனருகில் ஹேராயில், பவுடர், ஸ்நோ சீப்பு முதலிய நாகரீகத் தளவாடங்கள் அணிவகுத்து நிற்கும். - . நவநாகரிக டிசைன்களில் அமைந்த சோபாக்கள், நாற்காலிகள், மேஜைகள் பரவிக்கிடக்கும். அவற்றின் மேலே அழகிய மான் தோல்கள் பரப்பப் பெற்றிருக்கும். புத்தம் புதிய பீரோக்கள் நிற்கும். அவற்றிற்கு உயரே சுவரில் விகாரமான எலும்புக்கு மேலே கிளை கிளையாய் விரிந்திருக்கும் மான் கொம்புகள் காட்சி தரும் அலங்காரப் பொருளாக பளிச்சிடும் வர்ணங்களோடு பூத்த காகிதப் பூக்கள் பளபளக்கும். பித்தளைப் பாத்திரங்களிலே ஜம்பப் பொருள்களாய் வெளிச்சமிட்டு நிற்கும். அவற்றின் அழகைக் கண்டே வெட்கிக் கருகி உருமாய்ந்து போனது போல் தொங்கும் வாடி வதங்கிய மலர் மாலைகள் தெய்வத் திருப்படங்கள் மேலே மாட்சிமை தங்கிய மன்னர் பெருமானின் திரு உருவம் கண்ணாடி பொதிந்த படமாகக் காட்சிதரும் ஒரு சுவரில். மன்னரின் நெற்றியிலும் படச்சட்டத்தின் மையத்திலும் சந்தனப்பொட்டும் குங்குமமும் மிளிரும் என்றோ வந்து போன சரஸ்வதி பூஜையன்று மன்னர் பெற்ற பூஜையை நினைவுறுத்துவதுபோல,அதேமாதிரிசம் கெளரவத்தை லேடி படங்களுக்கும். இயற்கைக் காட்சிகளைக் காட்டும் படங்களுக்கும் தாராளமாக அளிக்கத் தயங்குவதில்லை முதலாளி. தெய்வப்படங்களுக்கோ வெள்ளிக்கிழமைதோறும் பூஜை உண்டு. சிறப்பாகக்கடவுளர் படத்திற்குத்தான்தீபதுப ஆராதனைகள் என்றாலும், தூணிலும் உளன் துரும்பிலும் உளன் என்ற கீழ்நாட்டு வேதாந்தத்திலே அசையாத நம்பிக்கை உடைய முதலாளி குடம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/40&oldid=841404" இலிருந்து மீள்விக்கப்பட்டது