பக்கம்:செவ்வானம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 39 சாம்பிராணி மரியாதைகளை லேடிகளுக்கும், மன்னர் பிரானுக்கும், புத்தர் சிலைக்கும், நிர்வாண சுந்தரிக்கும் அளிக்க மனம் கூசுவதே கிடையாது. - - அவர் அறையில் காந்தி படமிருக்கும். நேரு படேல், ராஜாஜி படங்கள் சுவரை அலங்கரிக்கும். ஒரு சுவரை நிறைத்திருக்கும் விசித்திர விசித்திரமான வர்ணக் கலவைகளுடன் அச்சிடப் பட்டிருக்கும் விநோதச் சித்திரங்கள் - அவதாரங்களின் லீலா விநோதங்களைக் காட்டும் படங்கள். ஜெர்மனியிலும் ஜப்பானிலும் வட இந்தியாவிலும் அச்சாகி வந்த படங்கள், கலையுமில்லாது, பக்திக்கும் வகை செய்யாது. கண்டு நகைப்பதற்கே அருமையான படங்கள். ரவிவர்மாவின் ஒவியங்களும் ஆங்காங்கே ஒளி தெறிக்கும். ராமர், கிருஷ்ணர், பரமசிவம், பார்வதி, திருப்பதிக் கடவுள், மீனாட்சி அம்மை, லட்சுமி, சரஸ்வதி பரிவாரங்களின் நடு நடுவே மலையாளத்து அச்சியும் மோகினியும், ஆடை அவிழ்ந்து விழுவதையும் கவனியாமலேபந்து பயிலும் சுந்தரியும், ஏசுமுனியும், கன்னி மரியாளும் புன்னகை புரிந்து தங்கியிருப்பார்கள். முதலாளி புன்னைவனம் அவர்களின் சொல்லும், செயலும் சர்வ திக்கு சமத்துவ கலாசாரங்களின் அவியலாகவே மிளிரும். ல9ட்டும் ஹாட்டும் போட்டுத் திரியத் துணிவார். நெற்றியிலே விபூதியும் சந்தனப் பொட்டும் இல்லாமல் காட்சி தரத் துணிய மாட்டார். குட்மார்னிங் என்று சொல்லும் பொழுதே கை குவித்துக் கும்பிடுவார். போயிட்டு வாங்க என்று சொல்லிக்கொண்டே சலாம் போடுவார். மேஜையில் பிளேட்டுகளில் உணவு பரிமாறிச் சாப்பிடத் தயங்கமாட்டார். அதே வேளையில் கையில் நீரெடுத்து உணவைச் சுற்றித் தெளித்துவிட்டு , ஒரு பிடிச்சோறு காக்காய்க்குப் பேர்டாமல் உண்ணத் துணியமாட்டார். - - திடீரென்று அவருக்கு ஒரு மோகம் ஏற்பட்டது. வெள்ளைக் காரர்களைப் போல நாமும் ஏன் முள் கரண்டியும் ஸ்பூனும் கத்தியும் உபயோகித்துச் சாப்பிடக்கூடாது? என்ற ஆசைதான். நினைத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/41&oldid=841405" இலிருந்து மீள்விக்கப்பட்டது