பக்கம்:செவ்வானம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 இன்று பெரும்பாலான மக்கள் வாழவேயில்லை ஒருநாள் கழிந்தது' என்ற கணக்கிலே - இன்றையப்பாடு தீர்ந்தது இனி நாளைக்கு எப்படியோ என்ற பெருமூச்சுயிர்த்து நாளோட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வாழ முயல வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கோ அன்றாட வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வசதிகள் கூட இல்லை. உயிர் வாழ்வதற்காகப் போராடி உழைத்து உழைத்து உடலோய்கிறவர்களின் முயற்சிகளும் உழைப்பும் வாழவேண்டும் என்ற ஆசைக்கு அமைக்கப்படுகிற அடித்தளமாகத் தான் அமைகின்றன. ஆகவே, வாழ்க்கை வசதிகள் வஞ்சிக்கப் பெற்றுவிட்டவர்களை வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வாழ்க்க்ைக் கவலையே பெருங்கவலையாக இருக்கும் பொழுது அவர்கள் வாழ்வை உயர்த்த முயல்கிற கலை, இலக்கியம் முதலியவற்றில் முழு மனதுடன் ஈடுபடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பது பேதமை. வாழ முடியாத மக்களுக்கு வாழவேண்டும் என்று கனவு நிறைந்த உள்ளத்தினருக்கு - வாழ்வின் ஒவ்வொரு நாளும் வேதனையாய், சோதனையாய் திகழ்கிறது. வாழ்க்கை வெயிலால் தகிக்கப்படுகிறவர்கள் உள்ளத்தினாலாவது நிழலருமை உணர முயல்கிறார்கள். அன்றாட அனுபவக் காலத்திலே வரண்டு போகிற உள்ளத்திற்கு குளுமை என்ற மயக்கத்தைத் தரும் போதைச் சரக்குகளாகத்தான் உள்ளன இன்றைய சினிமா, நாடகம், இலக்கியம் முதலிய கலைகளும் அரசியலும் பிறவும். வாழ்வு மூட்டைப்பூச்சிக் கடிகளை மறக்கச் சிலர் கஞ்சா, சாராயம், கள் போன்ற சரக்குகளை உபயோகித்து போதை ஏற்றிக்கொள்வது போல. காம போதையிலே பலர் கிரங்கிக் கிடப்பதைப் போலவே, கலைகளும் பயன்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/55&oldid=841420" இலிருந்து மீள்விக்கப்பட்டது