பக்கம்:செவ்வானம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 செவ்வானம் யாரு அப்படிச் சொன்னது? உனக்கு நீயே மந்திரியாகி எத்தனை காலமடா ஆச்சு, அட மந்தியே அஞ்சி பலம் இஞ்சி தின்ற பஞ்சைப்பயல் மாதிரி முழிக்கிறாயே, உனக்கு மூளை இருக்காடா மடையா? அது முக்கியமில்லையாம். கண்டு புடிச்சிட்டாரு பெரியவரு சிவசைலம் மார்க்கண்டேயன் நாடகத்தில் எமன் வேஷம் போட்டவர் என்பதை இதுமாதிரிச் சந்தர்ப்பங்களில் தானே காட்ட முடியம் ஆகவே காலை ஓங்கித் தரையில் மிதித்தும், கையை மேஜைமீது குத்தியும் அமர்க்களப்படுத்தினார் அவர் இருட்டிலே பின்னாலே போனாலும் கஷ்டம் தான். திருடன் கிருடன்னு அவள் கத்தி தொலைத்தால் ஆபத்து. நம்ம காரியங்களுக்குக் குந்தகம் ஏற்பட்டு...' 'நிறுத்து அளக்காதே என்று சீறினார் சிவசைலம், பயம் பயம்! மனிதனைச் சாகடிப்பதே பயம் தான். ஹஹஹ்ஹ! இரவிலே பயந்து விட்டு, இப்பொழுது வந்து காது குத்த, அடேய் உனக்கு என்ன தைரியமடா பயலே! என்று கத்தினார். நாரத வேஷக்காரனைப் படாதபாடு படுத்திய படாடோய இரண்யனாக மேடையிலே நடித்தவர் வாழ்க்கையிலே இவ்வளவு கூட நடிக்கவில்லையென்றால், அவர் பெற்ற அனுபவமெல்லாம் என்னாவது இதுவரை மண்ணாந்தைபோல் நின்ற மற்றவன் வாய்திறந்து பேசினான். ராத்திரியிலே கண்டுபிடித்திருக்க முடியாதுதான். அதனாலே ஒண்ணும் கெட்டுப்போகலே. இன்னிக்கு சாயங்காலம் நான் அந்தப் பக்கம் வந்தேன். அப்போ தாமோதரன் வீட்டிலே இல்லை. அந்தப் பெண் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்து விட்டுத் திருப்பியதை நான் பார்த்தேன். .” 'பார்த்தியா பேஷ். அதை ராஜாங்க ரகசியம் மாதிரி பாதுகாப்பது என்று நீயாகவே நிச்சயம் செய்து விட்டாயாக்கும்? 'இல்லை எசமான். வந்து...' என்று புடதியைச் சொறிந்தான் s$#@#ff.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/72&oldid=841439" இலிருந்து மீள்விக்கப்பட்டது