பக்கம்:செவ்வானம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 85 உலகத்தையே மறந்து விட்டீரா?' என்ற கிண்டல் மொழி அவன் இதயத்திலே தைத்தது. பேசியது யார் என்று அறிய, காரினுள் எட்டிப் பார்க்கக் காலடி எடுத்தான் அவன். அதற்குள் கார்வேகமாக ஓடத் தொடங்கியது. அது சிவசைலம் தான் என்பதை அவன் சிரமத்துடன் புரிந்து கொண்டதும் 'அயோக்கியப்பதர் என்று ஆத்திரமாகக் கத்திவிட்டு நடந்தான். 16 மறுநாள் அதிகாலை, உலகம் விழித்துவிட்டது என்பதை ஆரவாரமாக ஒலி பரப்புவதுபோல் பறவையினங்கள் கத்தி மகிழ்ந்தன. தாமோதரன் அப்பொழுது தான் விழித்தெழுந்தான். சூழ்நிலையின் புத்துயிர்ப்பும் அவனுக்கு உற்சாகமளித்தன. வீட்டினுள்ளிருந்து வெளியே வந்த அவனது கண்கள் இருளும் ஒளியும் கூடிக் கொலுவிருந்த இனிய வேளை எடுத்துக்காட்டிய அற்புத அழகைக் கண்டு மகிழ்ந்தன. அணையும் தீப்பொறிகள் போல் மங்கலாக மினுக்கிக் கிடந்த வெள்ளிகளும், ஒளியின் கைகள் வேகமாகத் தடவி எழில் பூசிய வானமும் தினந்தோறும் அலுப்பு தராத புதுமைகளாக விளங்கின. அன்று மற்றுமொரு புதுமை காத்திருந்தது அவனுக்காக அவன் வானத்தைப் பார்த்து நின்ற போது மெதுவாக அவனை நோக்கி வந்தாள் குமுதம், முன்பே வந்து அவள் காத்திருக்கவேண்டும் என்று தோன்றியது சட்டென அவளைக் கவனித்த தாமோதரனுக்கு அவன் திகைப்புற்றான். அவ்வேளையில் அங்கு யாரையும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவள் நினைவு அவனுக்கு வரவேயில்லை. முன்னிரவிலே தெருவில் குமுதத்தைப் பற்றி நினைத்தபடி நடந்தபோது, மோதித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/87&oldid=841455" இலிருந்து மீள்விக்கப்பட்டது