உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 23 வான். சீமான் எவ்வளவு செலவு செய்தாலும், இது என்ன சாதாரணச் செலவுதான் என்று கூறுவான். வேறு பல சீமான் களின் நடை, நொடி, பாவனைகளை தன் வலையில் வீழ்ந்த சீமானின் முன் புகழ்ந்து பேசுவான். அதன் மூலம், தன நண பனான சீமானின் மனதிலே, 'ரோஷ' உணர்ச்சி உணடாகச் செய்வான். அந்த ரோஷ உணாச்சி, ஷெவர்லே காராகக் காட்சி அளிக்கும்; ட்வீட் சூட்டாகத் தோற்றமளிக்கும்; உயர்தரமான ஓட்டல்களுக்கு இழுத்துச செல்லும; சினிமா நாடகங்களிலே, சோபாவிலே கொண்டுபோய் உட்கார வைக் கும்! அதிகமாக அவசியமற்ற செலவு செய்து வருகிறோம் என்று பூபதி கொஞ்சம் கவலைப்பட்டபோது, ரோஷ உணர்ச்சி ஊட்டுவதற்கு உபயோகித்த உபதேசம் மேலே குறிப்பிடப்பட்டது. அந்தப் பேச்சின் பயனாகப் பூதிதான் உண்மையிலேயே தன் அந்தஸ்துக்கு ஏற்றபடி செலவு செய்ய வில்லை என்று எண்ணவும், கொஞ்சம் வெட்கப்படவும்கூட நேரிட்டது. கோடீஸ்வரன், பூபதியின் ரோஷ உணர்ச்சியை அவ்வளவு சாமர்த்தியமாகக் கிளறிவிட்டான். அதன் பலன், அன்று ரமாமணி வீட்டிலே ரசமான விருந்து பூபதிக்கு! கோடீஸ்வரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள், கோகிலா ரமாமணியின் தங்கை. 'உங்களுக்கென்ன குறைச்சல்! மிட் டாதாரர்தான், நீங்கள் போட்ட கோட்டைத் தாண்டுவ தில்லையாமே?" என்றாள் கோகிலம். 'கோடு போடுவது நான், புதிய வீடு கட்டுவது ரமா” என்றான் கோடீஸ்வரன் வேடிக்கையாக. அந்த வீடு உங்களுக்கும் சொந்தம்தானே' என்று "பாத்யதை" யைக் கவனப்படுத்தினாள் கோகிலம். உனக்கு என்னப்பா குத்தலும் குடைச்சலும்? பெட்டி யிலே பணம் இருக்கிறது ஏராளமாக. வட்டி மூலம் அதனை வளர்க்கச் சரியான தந்தை இருக்கிறார். நீ சுற்ற லாம், ஆனந்தமாக. விலையைப் பற்றிக் கவலை இல்லாமல் சாமான்களை வாங்கலாம். காலத்தைப் பற்றியே கவலை யினறி, வேடிக்கையாக இருக்கலாம். எவ்வளவு வேண்டுமா னாலும் செலவு செய்யலாம்_நீ கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்ன கெட்டுவிட்டது! எப்படியோ சொத்து சேர்ந்துவிட்