உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பூபதியின் டது; சுகமாக வாழ முடிகிறது. நீ எதற்குப் பாடுபடப் போகி றாய்? மற்றவர்களைப் போல நீயும் கஷ்டப்பட்டுப் பணம் சேர்த்திருந்தால், உனக்கும் தெரியும், அதனுடைய பலன்! சீமானுக்கு மகனாகப் பிறந்தாய், சுகம் என்ற தொட்டி லிலே வளர்ந்தாய், இப்போது ஆனந்தம் என்ற அம்ச தூளிகா மஞ்சத்திலே புரள்கிறாய். உனக்கு, ஊரின் கஷ்டம் என்ன தெரியும்? பணம் தேடி அலுப்பவனின் பதைப்பு எப் படிப் புரியும்? பாடுபடுபவனின் தொல்லையை எப்படி நீ தெரிந்துகொள்ளப் போகிறாய்! உன் கவலை பூராவும், வித விதமான களியாட்டங்களைத் தேடுகிற அளவுதானே!-- பூபதியின் நணபர்களிலே இவன் ஒரு தனிரகம். பணக்காரனி டம பணம் இருக்கிறது, மலரிலே மணம் இருப்பதுபோல. நாம் பச்சிலை ; நாளாவடடத்திலே சருகு ஆகிவிடுவோம். மலருக்கு இருக்கும் மணம் தனக்கு இருக்க வேண்டுமென்று பச்சிலை எதிர்பார்க்கலாமா? என்று வாதம் புரிபவன், வக்கீல் அல்ல, வியாபாரி. வியாபாரியிலும், நஷ்டக் கணக்கையே அடிக் கடி கண்டு நொந்தவன்; பூபதியுடன் ஒரு காலத்திலே படித்த வன் என்ற முறையிலே, சந்திப்பு ஏற்படும். அப்போதும், தன் சஞ்சலத்தை மறக்கமாட்டான. பூபதியும் கோடீஸ்வரனும் ஆனந்தமாக விளையாடிவிட்டு வருகிறபோது கண்டான்; நண்பன் என்ற முறையிலே, பூபதியின் சந்தோஷத்தின சூட்ச மத்தைப் பற்றியும், தன சஞ்சலத்தைப் பற்றியும் பேசி பேச முடி னான். அதுவும், மற்றப் பணக்காரர்களிடம் யாதல்லவா? "போடா சுடுமூஞ்சி' என்று கேலி பேசிவிட்டு, முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவனிடம் பேசுவதற் காக அதுவரை நிறுத்தி வைத்திருந்த மோட்டாரை, ஓட்ட லானான் பூபதி. வளமில்லாத வியாபாரம் செய்துவந்த வரதராஜன், தன் ‘கூட்டாளி' காதரிடம், பூபதியின் செவ் வம், செல்வாக்கு ஆகியவைபற்றி பெருமையாகப் பேசிக் கொண்டே நடந்தான். காதர், பணக்காரர் உயர்ந்தவர்கள்; ஏழை மட்டம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவனல்ல. ஆகவே பூபதியைத் தன் நண்பன் புகழ்ந்தது பிடிக்கவில்லை. எவன் தன் சாமர்த்தியத்தால், உழைப்பால், முயற்சியால், வாழ்கிறானோ அவனைத்தான் பாராட்ட வேண்டுமே தவிர