உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 25 பணத்தை யாரோ, எப்படியோ திரட்டிக் கொடுத்துவிட, அதை வைத்துக் கொண்டு படாடோப வாழ்வு நடத்துபவ னைப் புகழ்வது, மதியீனம் என்பது காதர் கொண்டிருந்த கருத்து. ஆகவே பூபதியின் மோட்டார் போகிற வேகத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, "கிடக்கிறான் தள்ளப்பா! என்ன புகழ்வது அவனை! மோட்டாரிலே சவாரி செய்கிறா னாம்; அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத தேவைப்படும் பணத்தைக்கூட அவன சம்பாதித்ததில்லை - சம்பாதிக்க முடியாது- சம்பாதிக்க வழி கிடையாது. என்னமோ, பணக்காரனுக்குப் பிள்ளை யாகப் பிறந்துவிட்டான்; அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடுகிறான். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன தன் னுடைய புத்தி சாதுர்யத்தாலும், உழைப்பினாலும், இந்தச் சொத்து சேர்த்தானா, திறமைசாலி என்று இவனைப் புகழ? அவன் மட்டும், அந்தச் சீமானுக்கு மகனாகப் பிறக் காதிருந்தால், அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு, அவனுக்குப் பிழைக்கும் மார்க்கம் இன்னது தெரியுமென்று! படாடோபத்தோடு சரி. படிப்பு கிடையாது. மிரட்டத் தெரியும்: ஒரு வேலையும் தெரியாது. எப்படிப் பிழைப்பான்? என்ன வேலைக்கு இலாயக்கு? கூலிவேலைகூட. செய்ய முடியாதே, உடலிலே அதற்கு வலிவு ஏது? ஒன்றுக் கும் பயனற்றவன், ஏதோ அங்கே பிறந்ததால் ஆடுகிறான் ஆட்டம். இதிலே பெருமை இல்லை. இதற்காக இவனை நான் மதிக்கத் தயாராக இல்லை! என்னைக் கேட்டால், அவன் கையாலாகாதவன்; பிழைக்கத் தெரியாதவன்; அப்பா சேர்த்து வைத்திருப்பதைச் செலவிட்டுக் கொண்டு திரியும் ஒரு வீண் ஜம்பக்காரன' என்றுதான் சொல்லுவேன." என்று வெறுப்பு, அலட்சியம் இரண்டையும் ஏராளமாகக் கலந்து பேசினான். பேசிவிட்டு, 'அக்பர்ஷ:ா சிகரெட்டைப் பற்ற வைத்தான், ஆனந்தமாக. குட் மார்னிங் மிஸ்டர்! உட்காருங்கள். உங்களைப் போன்ற உயர்ந்த அந்தஸ்துக்காரர்கள்தான ஊருக்கே மதிப் புத்தர வேண்டியவர்கள். உங்களுடைய உதவியும், திறமை