உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பூபதியின் யும்தானே ஊருக்கே பொதுச் சொத்து! நீங்களெல்லாம், நினைத்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும். நீங்கள்தான் செல்வ ஊர் ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திச் உள்ளே வேண்டும். ஜனங்கள் நல்வழிப்பட, நாகரிகம் பெற, அறிவு பெற, நீங்கள் தான் வேலை செய்ய வேண்டும்." என்றார் டிப்டி கலெக்டர்! ஜே.ஈஸ். பங்களா எதிரே வந்து நின்றது, மிட்டாதாரர் பூபதியின் மோட்டார் என்பதை டபேதார் சொன்னதும், புதிய நாற்காலியைப் போடச் சொன்னார். பூபதி கொஞ்சம் ( வட்கத்துடன் வரக்கண்டு. புன்சிரிப்புடன் வரவேற்றார், கை குலுக்கினார். கொஞ்ச நேரம் ‘லோக' விஷயம் பேசினார். பிறகு, பூபதி யுத்தந்தி சம்பந்தமாக மேலும் கொஞ்சம் மும்முரமாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காக, அவனைத் தூண்ட ஆரம்பித்தார். பூபதிக்குக் கொஞ்சம் 'ஸ்துதி' செய்தால்போதும்; சொல்கிற படி ஆடுவான் என்று ஜே. ஈஸ். நினைத்தார், ஆகவேதான், பூபதியின் பெருமையைப் பூபதிக்குக் கவனப்படுத்தினார். பூபதிக்கு ஆனந்தம்! விடை பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது, தன் வீட்டிலே ஏதோ விசேஷத்துக்குச் சமை யல் செய்த வேதாந்தாச்சாரி வரக்கண்டான் பங்களாவுக் குள். 'ஐயர்! இங்கே என்ன வேலையாக வந்தீர்?" என்று பூபதி கேட்க, ஐயர் சிரித்துக்கொண்டே, "வேலையா? இது என் மருமான் மோன்னோ?" என்றார். “என்ன என்ன?" என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் பூபதி. 'ஜெமீன்' தார்வாள்! டிப்டிக் கலெக்டர் யாருன்னு நினைச்சீர்? அவ ருக்கு என் தமையனாரின் மகளைத்தான் கொடுத்திருக்கு என்று கூறிப் பந்துத்வத்தை விளக்கினார் வேதாந்தாச்சாரி. விளங்கவில்லை; கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது அந் தப் பேச்சு, பூபதிக்கு சூட்சமத்தைத் தெரிந்து கொண்டார் வேதாந்தாச்சாரி. ஓ! அதனாலே மிரள்கிறீரா? டிப்டிக் கலெக்டர், எங்களவாதான் ஜெமின்தார்வாள்! பெயர், ஈஸ் என்று இருக்கவே, கிருஸ்தவன்னு எண்ணிண்டீர் போலி ருக்கு. ஈஸ் என்பது, ஜெகதீஸ் என்ற பெயரின் ரத்னச் சுருக்கம். அவர் பெயர் ஜெகதீசாச்சார். சீமையிலே, ஈஸ்னு பெயரை வைச்சுண்டார். உத்தியோகத்துக்கும் அதே பெயர்