உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 27 ஒட்டிண்டது, அவ்வளவுதான் என்று விளக்கம் கூறினார். பூபதி, வேதாந்தாச்சாரியாருக்கு, வழக்கத்தைவிடச் சற்று அதிகமான மரியாதை காட்டிவிட்டு பூபதி மோட்டாரில் புறப்பட்டார் வீடு நோக்கி, கோடீஸ்வரன், வேறு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுப் போய்விட்டான், "டாக்சி'யில் "பூபதி, பெரிய குடும்பம். நேக்கு அவா குடும்பத்திடம் ரொம்ப நாளாகப் பரிச்சயம்' எனறு கூறிக்கொண்டே வந் தூர், வேதாந்தாச்சாரி. டிப்டி கலெக்டர் ஆன பிறகு உனக்கு இப்படிப்பட்ட சீமான்களின் சினேகம் கிடைத்தது. எனக்கு, இவர்களுடைய சினேகிதம் நெடுநாட்களாக உண்டு என்று கூறிக்கொள்வதிலே அவருக்கும் வகையான சந்தோஷம். டிப்டி கலெக்டர் ஆரம்பித்தார் தன் அர்ச்சனையை. "இடியட்! கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட் கார்ந்திருந்தான், கொஞ்சம்கூட மட்டு மரியாதை தெரியா மல். சுத்த ஞானசூணயம். வைசிராயின் பெயர் தெரிய வில்லை; இன்னமும் விலிங்டன்தான வைசிராயாக இருப்ப தாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இவனெல்லாம், ஊருக் குத் தலைவர்களாக வேண்டும். இந்த உதவாக்கரைக்கு ராவ்பகதூர் வேண்டுமாம்! எப்படியோ, பணம் சேர்ந்து லிட்டது; ஊரை ஏமாற்றிச் சேர்த்துக் கொண்டான். பணம இருப்பதாலேயே, இவனுக்கு நாமெல்லாம் மதிப்புத் தர வேண்டுமாம். மடையன! ஒரு சாதாரண கிளார்க்குக்குத் தெரிந்தவிஷய ஞானம்கூட இவனுக்கு என்னதெரியும்? மளமள வென்று அளக்கிறான், அந்த ஆபீசர் தெரியும், இந்த கலெக் டர் தெரியுமென்று. தெரிந்து என்ன, தெரியாமல் போனால் என்ன? எழுத்துப் பிழையில்லாமல் இனனமும், தன் கையெ ழுத்தைப் போடத் தெரியாது. நாமும் உத்யோகம் செய்கி றோம், தலை நரைக்கிறவரையில். என்ன காண்கிறோம்! அந்த இடியட் 'இன்கம் டாக்ஸ்' நான்தான் இந்த ஜில்லா லிலேயே அதிகம் கட்டுகிறேன் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறான். இவனுக்கு எஸ்டேட் மானேஜர், பி.ஏ. வாம்! எவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறான் தெரியுமோ? பணம் போய் எப்படியோ மாட்டிக் கொண்டு இப்படிப்பட்ட