உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பூபதியின் இடியட்களை நம்ம வாயினாலேயே புகழ்ந்து பேசவேண்டிய நிலைமையைக்கூட உண்டாக்குகிறது!" என்று சுடச்சுடப் பேசினார், மிஸ்டர் ஜே ஈஸ். பணம் இருக்கலாம்; நீர் பெரிய பங்களாவிலே வாழ லாம்; அதை எல்லாம் இங்கே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உம்மிடம் சொத்து இருப்பதாலேயே. மதிப்புத் தரவேண்டுமென்ற அவசியம் கிடையாது.சட்டம் உம்மையும் சாதாரண மனிதனையும் சமமாக நடத்தும். உளறாமல்,கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காக, உண்மையை ஒளிக்காமல் பதில் சொல்ல வேண்டும். குடித்துவிட்டு, நிலை தவறி, மோட்டார் ஓட்டிக்கொண்டு போனது, முதல்குற்றம்; மோட்டார் ஓட்ட லைசென்ஸ் வாங்கவில்லை—அது இரண் டாவது குற்றம்;நாலு காலன் பெட்ரோல் டின் உமது மோட் டாரில் இருந்தது. முதலில் அதற்கு “கோட்டா” இல்லை; பிளாக்மார்க்கட் பெட்ரோல் அது. அது மூன்றாவது குற்றம், ஏன் உன்னை நான் சார்ஜு செய்யக் கூடாது?--அன்று மாலைதான், சார்ஜு எடுத்துக் கொண்டார், சப்-இன்ஸ் பெக்டர் சாப்ஜான். அவருக்கு. கனம். ஆகாகான் தூர பாத்யம் ஆகவே அவர் சாதாரணமாக எந்தச் சீமானாக இருந்தாலும், நமக்கென்ன என்று கூறுபவர்; பூபதியின் பூர்வோத்திரம் தெரியாது. தெரிந்தாலும் அதற்காகச் சப் இன்ஸ்பெக்டர் தன் டீக்கைக் குறைத்துக்கொள்ளுகிறவரல்ல. டிப்டி கலெக்டரிடம் கைகுலுக்கிய ஜோரில், மோட்டாரைக் கொஞ்சம் வேகமாக ஓட்டினார் பூபதி. ஒரு சிறுவன், சிக்கிக் கொள்ள இருந்தான்; திடீரென்று, 'பிரேக்' போட்டார். ஜனங்கள் கூவினார்கள்; இவ்வளவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெகு சமீபத்திலே நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர்சேதி என்ன என்று பார்க்கச் சொனனார் ஐவானை. அவன் மோட்டாரை நிறுத்தச் சொல்லிவிட்டு, 'ஐயா கூப்பிடுகிறார்' என்று சொன் னான் பூபதியிடம். பூபதிக்குப் பழைய சப்-இன்ஸ்பெக்டரே அங்கு இருப்பதாக எண்ணம். ஆகவே, "நாளைக்கு வீட் டண்டை வரச்சொல் என்று கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான், இதை ஜவான் சொன்னதும் ஒரு முறைப்பிலே,