உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் அலுவல் 29 ஜவானின் குலையை நடுங்க வைத்தார், வெளியே போனார். தன் கைப்பிரம்பை ஆட்டிக் கூப்பிட்டார் பூபதியை. புதிய ஆசாமியாக இருக்கவே, பூபதி, ஸ்டேஷனை நோக்கிவர வேண்டி இருந்தது. 'உள்ளே போய் இரும்' என்று கூறி விட்டு, கும்பலை விரட்டும்படி ஜவான்களை அனுப்பிவிட்டு நேரே மோட்டார் இருக்குமிடம் சென்று சோதனைபோட்டு, பெட்ரோல் டின்னைக் கண்டுபிடித்து, அதைத் தூக்கிக் கொண்டு வரும்படி வேறோர் கான்ஸ்டெபிளுக்கு உத்திரவு செய்துவிட்டு, கோபமாக உள்ளே நுழைய, அங்கே "ரைட் டர்' பூபதி எதிரே நின்று கொண்டிருக்கவும், பூபதி டி. எஸ். பி.போல,உட்கார்ந்திருக்கவும் கண்டு, ஒரு கனைப்பினால், ரைட்டரை, அவருடைய ஆசனத்துக்குத் துரத்திவிட்டு விசா ரணையைத் துவக்கினார். பூபதி தன்னுடைய மிட்டாதார் நிலைமையை ஜாடை காட்டவே, சாப்ஜான், கோபம் அதி கரித்தது. பணக்காரர் என்ற பதவி, ஏழைகளை மிரட்ட உதவுமே தவிர, பொறுப்பாகவும், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் அதி காரியை அடக்கப் பயன்படாது என்பதை விளக்க வேண்டி, காரசாரமாகப் பேசி, சார்ஜும் செய்துவிட்டார். கோபம்! ஆனால் யார்மீது காட்டுவது? பூபதி, மோட் டாரை ஓட்டிக்கொண்டு நேரே சப் கலெக்டரிடமே போக லாமா, இந்த சப்-இன்ஸ்பெக்டரைப் பற்றிக் கூறிவிட்டு வருவோமா என்று எண்ணினார். பிறகு, "பெட்ரோல் டின்' கவனம் வந்தது! நேரே பங்களா போவது, பிறகு என்ன யோசிப்பது என்று தீர்மானித்து, மோட்டாரைக் கொஞ்சம் குறைந்த வேகத்திலேயே ஓட்டிக் கொண்டு போனார். வழியிலே இரண்டு கூலிக்காரர்கள், மோட்டாரில் போகும் பூபதியைக் கண்டனர். அதிலே ஒருவன், கும்பிட் டான் பூபதியை. மற்றவன், "ஏன்? யார் அவர்?' என்று கேட்டான். கும்பிடு போட்டவன் சொன்னான். "மனுஷ ஜென்மமெடுத்தா, இப்படி எடுக்க வேண்டும். நாம் இருக்கிறோம் நாய் படாதபாடு பட்டுக்கொண்டு; அதோ பார்டா,போகிறான், மகராஜன்! புண்யசாலி. போன