உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பூபதியின் ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ! இந்த ஜென் மத்திலே, இவ்வளவு அந்தஸ்தோடு வாழறான்! கடவுள் கடாட்சம்டா" என்றான். மற்றவன், அதை மறுத்தும் பேச வில்லை; ஆதரித்தும் பேசவில்லை. நிலக்கடலையைக் கொரித் துக் கொண்டே இருந்தான். இன்னும் இரண்டொரு வீதி களே இருந்தன வீடுபோக. வேகத்தைக் குறைத்தார் பூபதி; மறுபடியும் யோசனை வந்தது,யுத்தப் பிரச்சாரகரைப்போய் பார்த்து விஷயத்தைச் சொல்வோமா என்று.போவதா வேண்டாமா என்ற யோசனையிலே ஈடுபட்டு, மோட்டாரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே இருந்தார். இரண்டு ஆலைத் தொழிலாளர்கள், நடுப்பாதையில் சென்று கொண் டிருந்தனர்; மோட்டர் ஊதுகுழலைப் பலமுறை அழுத்த வேண்டி நேரிட்டது, பூபதிக்கு. ஆலைத் தொழிலாளர், நிதானமாக, மோட்டாரை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு, பாதை ஓரம் சென்றனர். மோட்டார் பிறகு அவர் களைத் தாண்டிச் சென்றடோது, ஒரு தோழன், மற்றவனி டத்திலே, 'போறான் பார்டா, பொதிமாடு மாதிரி. நாம்ப வேகாத வெயிலிலே பாடுபட்டுவிட்டு, தள்ளாடி நடக்கி நோம். எப்படிப் போறான் பார்த்தாயா, மோட்டார்லே அந்த மோட்டார் சவாரியிலேகூட அவருக்குக் களைப்பு வந்துட்டுது; கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக் கிறான்! நாம்ப, உடம்பு பூரா மண், வீட்டிலே போய்க் கழுவ வேணும்; தெருக் கோடியிலே தண்ணி வந்தா..." என்று சொன்னான். பூபதியின் மாளிகை இருக்கும் தெருக்கோடி யிலே, ஏதோ கூட்டம்; ஒருவன், உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்கக் கண்டான் பூபதி. ஒரு சமயம் யுத்தநிதி கூட்டமோ என்று எண்ணினான். பிறகு செ! யுத்தநிதிக் கூட்டம் இப்படி ஏன் நடுத்தெருவிலே நடக்கப்போகிறது? என்று எண்ணினான். எதற்கும் சுவனிப்போம் என்றெண்ணி மோட்டாரை மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றான். பிரசங்கி ஆவேசமாகப் பேசுவது தெரிந்தது. ஜனங்கள் மோட் டார் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, பிரசங்கத் தைச் சரியாகக் கவனிக்காமலிருந்தனர். பிரசங்கி, ஒருவிநாடி பேச்சை நிறுத்தினான். மோட்டாரைப் பார்த்தான்; அதிலே