உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 37 வா.வ. ஏ ! இங்கே பாவம், புண்யம் என்ற பேச்செல் லாம் வேண்டாம். பூ: பாவம், புண்யம் இதெல்லாம் இங்கே கூடாதுங் களா? எனக்குத் தெரியாதுங்கோ. (பூஜாரி போகிறான்) குற்: இரண்டாவது சாட்சி, இருளாண்டி [கோர்ட் சேவகன் இருளாண்டியைக் கூப்பிடு கிறான். இருளாண்டி வருகிறான்.) குற்: அப்பா இருளாண்டி! போன வெள்ளிக்கிழமை. ஆலமரத்தடி சாமியார் உபதேசம் செய்தாரே, நீ இருந்து கேட்டதுண்டா? னார்? இரு இருந்தேனுங்க. நீங்களும் வந்திருந்திங்களே. குற்: என்னைப் பார்த்து அவர் என்னப்பா சொன் இரு : அடே அஞ்ஞானி! ஏன இன்னமும் சேவையிலே ஈடுபடாமலிருக்கிறாய்? மூலைக் கோயிலானை வணங்கு. அவனுக்குச் சகலத்தையும் சமர்ப்பித்துவிடு, சொன்னார். குற்: நான் என்ன செய்தேன்? என்று இரு : மயக்கம் வந்த மாதிரி ஆயிட்டிங்க; விழுந்து விழுந்து கும்பிட்டிங்க. குற்: பிறகு? இரு: சாமியார் விபூதி கொடுத்தாரு. பூசிகிட்டிங்க. குற்: அதற்குப் பிறகு? இரு: கூடையைத் தூக்கிட்டு ஓடினிங்க. குற்: ஓடி...?