உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழக்கு இரு: நானும் பின்னாலேயே ஓடி வந்தேன். நேரே மூலைக்கோயில் போய், கூடையிலே இருந்த கற்பூரத்தைக் கொளுத்தினிங்க; பக்தர்களெல்லாம் விழுந்து கும்பிட்டாங்க. குற்: அவ்வளவுதான் அப்பா. {இருளாண்டி போகிறான்-] குற்: செட்டியாரும் ஒரு சாட்சிங்க. (செட்டியார் வருகிறார்.] குற்: செட்டியாரே! வியாழக்கிழமை தங்கள் வீட்டிலே. காலட்சேபம் நடந்ததுங்களா? செட்: ஆமாம்! குற்: என்ன கதை நடந்ததுங்க? செட்: பக்த ராமதாஸ். குற்: கதை முடிஞ்ச பிறகு, நீங்க என்கிட்டே என்ன, சொன்னீங்க' செட்: ராமதாசுடைய பக்தியே பக்தின்னு பேசினேன். குற்: அவரைப்போல நாமெல்லாம் பக்திமான்களா இருக்கணும்னுகூ...ச் சொன்னிங்களே. செட்: ஆமாம்.. சொன்னேன். குற்: அப்ப, பாகவதர் என்ன சொன்னாருங்க? செட்: என்னமோ சொன்னார். குற்: பரவாயில்லை சொல்லுங்க. செட்டியாரே, உங்க ளுக்கு ஒப்பற்ற ஒரு நாயனார் பெயர் இருக்கிறது, மாணிக்க வாசகரும் மகாபக்திமான் என்று சொல்லலே...? செட்: சொன்னான், அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி ஒருநாள் கூப்பிடுவேன் என்ற நினைப்பிலே. குற்: கதையைச் சுருங்கக்கூடச் சொன்னாரே. செட்: ஆமாம், சாம்பிள் காட்டினான். குற்: அவ்வளவுதானுங்க. (அவரும் போகிறார்.]