உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வழக்கு ஆயிரக்கணக்கான மக்கள், 'ராமா! ராமா!' என்று உச்சரித் ததும், என் நினைவிலே வந்தது. உடனே கற்பூரம் செட்டியா ருடையதாக இருந்தால் என்ன, பக்தியே மேல் என்று உறுதி பிறந்தது. வினாயகருக்குக் கொளுத்தினேன். ராமதாசரும் மாணிக்கவாசகரும் கள்ளர்களானால், நானும் கள்ளன் தான்! மா: உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தா குமா? இராமதாஸ் ஆகிவிடுவாயா நீ? குற்:ஆகாது! ஆனால் குருவியும் பறவைதான்; பருந்து போலவே, இராமதாசும் நானும் பக்தர் இனம்தான். மா: இந்தப் பசப்பு வேண்டாம். அந்தப் பழங்கதை களைப் பேசித் தப்பித்துக் கொள்ள முடியாது. குற்: அந்தப் பக்திமான்களின் கதைகள் நீதிமன்றத் துக்கு ஏற்றவையல்லவா? மா: இது கோர்ட்! நீதிமன்றம்! இங்கே சட்டத்தின்படி தான் வழக்குகள் விசாரிக்கப்படும். குற்: நீதிக்கும் சட்டத்துக்கும் சம்பந்தம் இல்லையா? மா: போதும், வாயாடாதே.ராமதாசர் செய்தால் நீயும் செய்ய வேண்டுமோ? ராமதாசருக்கு இருந்த பக்தி எப்படிப்பட்டது! நீ...? குற்: என் பக்தி அதற்கு எள்ளளவும் குறைந்ததல்ல. நீங்கள் நம்பாததாலேயே என் பக்தி குறைந்துவிடுமா என்ன? மா: நீ பக்திமானா அல்லவா என்பது பற்றி எனக்கு அக்கரை இல்லை. கோர்ட்டின் முன் நீ ஒரு கள்ளன் என்று நிறுத்தப்பட்டிருக்கிறாய். குற்: உண்மைதான்! அந்த நாட்களிலே ராமதாசரும் மாணிக்கவாசகரும் நிறுத்தப்பட்டதுபோல. மா: மறுபடியும் அந்தப் பழைய கதையைப் பேசாதே. அந்தக் காலம் வேறு; இந்தக் காலம் வேறு. அந்தக் காலத்து நீதி வேறு; இந்தக் காலத்து நீதி வேறு.